Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அதுல்ல.. பெட்ரோல் பங்க் யூனிபார்மை சுட்ட இந்திய அணி.. ரசிகர்கள் மரண கலாய்!

Recommended Video

இந்திய அணியின் புதிய உடை இதுதான்... வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

பிர்மிங்காம் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் புதிய ஜெர்ஸி அணிந்து விளையாட உள்ளனர்.

அந்த புதிய உடையை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். பலருக்கும் புதிய உடை பிடிக்கவில்லை. பழைய நீல நிற உடை தான் வேண்டும் என கூறி உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்த புதிய விதியால் உலகக்கோப்பை தொடரில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி ஆடும் போட்டிகளில் எதிரணி நீலம் அல்லாத வேறு நிற உடை அணிந்து ஆட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய விதி

புதிய விதி

சொந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அணி தங்கள் உடையை அணிந்து விளையாடலாம். எதிரணியின் உடை அதே நிறத்தில் இருக்கும் பட்சத்தில் அந்த அணி வேறு நிற உடை அணிந்து ஆட வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்தி உள்ளது ஐசிசி. அதன்படி உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி நீல நிற உடை அணியும் நிலையில், இந்தியா வேறு நிற உடை அணிந்து ஆட உள்ளது.

காவி நிறம்

காவி நிறம்

இது குறித்த தகவல் வெளியான போதே, இந்தியா காவி போன்ற ஆரஞ்சு நிற உடை அணிய உள்ளதாக சலசலப்பு எழுந்தது. அது ஆளும் பாஜக அரசின் கட்சி கொடியில் உள்ள நிறம் என்ற பேச்சு எழுந்தது. காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கிரிக்கெட்டிலும் அரசியல் நுழைந்துள்ளதாக பலத்த எதிர்ப்பு தெரிவித்தது.

நிறம் தான் பிரச்சனை

புதிய உடை குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்திய வீரர்கள் புதிய உடையுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த உடையின் டிசைன் நன்றாகத் தான் உள்ளது. ஆனால், கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு நிறம் மட்டுமே உறுத்துகிறது.

ரசிகர்கள் கலாய்ப்பு

இந்த ஆரஞ்சு நிற உடைக்கு சில ரசிகர்கள் மட்டுமே வரவேற்பு அளித்து கருத்து கூறி உள்ளனர். பெரும்பாலும் நக்கல், நையாண்டி செய்து இருக்கிறார்கள் ரசிகர்கள். பலர் "பக்தர்கள்" போல உள்ளது என்று கூறி உள்ளனர். ஆனால், சிலர் மட்டும் இந்த ஆடை எப்படி இருக்கிறது என சரியாக கண்டு பிடித்து கலாய்த்து வருகிறார்கள்.

பெட்ரோல் பங்க் உடை

பிரபல இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அணியும் உடையை போல இந்திய அணியின் உடை உள்ளதாக இரண்டு புகைப்படத்தையும் ஒப்பிட்டு கலாய்த்து வருகிறார்கள். சிலர் "பெட்ரோல் இன்னைக்கு என்ன விலைப்பா?" என்று கேட்டும் இருக்கிறார்கள்.

சாஹல் ரொம்பப் பொருத்தம்

அதிலும் சாஹல் இந்த புதிய உடையில் பங்க் ஊழியர் போலவே இருக்கிறார் என கலாய்த்து இருக்கிறார்கள் சிலர். இப்பவே இப்படி என்றால், இந்தியா - இங்கிலாந்து போட்டியின் போது இன்னும் பயங்கரமாக கலாய்ப்பாங்களே!

Story first published: Saturday, June 29, 2019, 14:12 [IST]
Other articles published on Jun 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+