Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே!

Recommended Video

இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே!

மான்செஸ்டர் : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அணிய உள்ள புதிய ஆடை குறித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

அந்த புதிய ஆடையை பார்த்தால் பகீர் என்று உள்ளது, முன்புறம் சுத்தமாக ஆரஞ்சு வண்ணத்தை தவிர ஒன்றுமில்லை. இதற்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்பதை ஊகித்து, நல்ல விஷயம் ஒன்றிற்காக தான் இந்த ஆடை என திசை திருப்பவும் வாய்ப்புள்ளது.

இரண்டு ஆடைகள்

இரண்டு ஆடைகள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), தொலைக்காட்சி ஒளிபரப்பு கொண்ட அனைத்து ஐசிசி தொடர்களிலும், தொடரை நடத்தும் நாடுடன் விளையாடும் போது எதிரணி, வேறு நிற உடை அணிய வேண்டும் என புதிய விதியை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்திய அணி, உலகக்கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வேறு நிற ஆடை அணிய உள்ளது.

(காவி) ஆடை சர்ச்சை

(காவி) ஆடை சர்ச்சை

இந்த இரண்டாவது ஆடை குறித்த செய்திகள் வெளியான உடனேயே, அது காவி நிறத்தை ஒட்டிய ஆரஞ்சு வண்ணம் கொண்டது என வதந்திகள் கிளம்பின. இந்திய அணி வட்டாரத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஐசிசி தகவல்

ஐசிசி தகவல்

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஐசிசி அதிகாரி ஒருவர் பிசிசிஐ-யிடம் சில வண்ணங்கள் தரப்பட்டன. அதில் இருந்து அவர்களுக்கு ஏற்ற வண்ணங்களை தேர்வு செய்துள்ளார்கள் என்றார்.

பழைய ஆடை

பழைய ஆடை

மேலும், ஆரஞ்சு வண்ணம் கொண்ட இந்திய அணியின் பழைய டி20 ஆடையின் அடிப்படையில் தான் இந்த வண்ணம் எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் இருக்கும் வடிவமைப்பாளர்கள் இதை வடிமைத்து வருகிறார்கள். என்றார்.

எப்படி இருக்கிறது?

எப்படி இருக்கிறது?

புதிய ஆடை என வெளியாகி இருக்கும் புகைப்படம் முழுக்க ஆரஞ்சு வண்ணம் கொண்டு பார்க்கவே கண்ணை கூசுகிறது. அதில் "OneDay4Children" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்துப் பார்த்தால், இந்த ஆடை அணியும் நாளில் கிடைக்கும் வருமானத்தை குழந்தைகளுக்கு அளிக்கும் திட்டமும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

வலுக்கும் எதிர்ப்பு

தற்போது வெளியாகி இருக்கும் ஆடையின் புகைப்படம் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றாலும். இப்போதே புதிய ஆடை காவி நிறத்தில் இருக்கிறது என அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Story first published: Wednesday, June 26, 2019, 19:56 [IST]
Other articles published on Jun 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+