Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்சமாமுக்கு அங்க என்ன வேலை? அவரை ஏன் உள்ளே விட்டீங்க? பாகிஸ்தான் அணிக்குள் வெடிக்கும் சர்ச்சை!

Recommended Video

Inzamam Ul Haq: தோல்விக்கு காரணம் இவர் தான்-பாகிஸ்தான் அணிக்குள் வெடிக்கும் சர்ச்சை!- வீடியோ

லண்டன் : பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக ஆடி வருகிறது. அதற்கு இன்சமாம் உல் ஹக் தான் முக்கிய காரணம் என முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டத் துவங்கி இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அணி மற்ற போட்டிகளில் தோற்றத்தை கூட பாகிஸ்தான் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்திய அணிக்கு எதிராக மோசமாக தோற்றதை தான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே துவங்கி, உப்புசப்பில்லாமல் முடிந்தது. போட்டியின் துவக்கம் முதல் இறுதி வரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. எந்த இடத்திலும் பாகிஸ்தான் அணி வெல்ல வாய்ப்பு உள்ளது என ஒருவராலும் கூற முடியாத அளவு ஆடி, 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான்.

இன்சமாம் என்ன செய்தார்?

இன்சமாம் என்ன செய்தார்?

இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் தேர்வுக் குழு தலைவர். அவருடைய வேலை சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்வது மட்டுமே. யாரை ஆட வைக்கலாம் என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் வேலை. ஆனால், இதில் இன்சமாம் தலையிடுவதாக முன்பு இருந்தே புகார் உள்ளது. ஆனால், இந்த புகார்கள் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருந்து நேரடியாக வரவில்லை என்பதால் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கேள்வி

கேள்வி

ஆனால், இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் இன்சமாம், ஆடுகளத்தையும், பிட்ச்சையும் சோதனை செய்தார். இன்சமாமுக்கு மைதானத்தில் என்ன வேலை? தேர்வுக் குழு தலைவர் ஏன் அங்கே போகிறார்? என்று கேள்வி கேட்கிறார்கள் முன்னாள் வீரர்கள் சிலர்.

ஏன் உள்ளே விட்டீர்கள்?

ஏன் உள்ளே விட்டீர்கள்?

மேலும், தேர்வுக் குழு தலைவர் வேலை பாகிஸ்தானில் அணியை தேர்வு செய்ததோடு முடிந்து விட்டது. அவர் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு செலவில் இங்கிலாந்து சென்றார். அவரை ஏன் அணியின் செயல்பாடுகளுக்குள் பங்கேற்க விட்டீர்கள்? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் அனேகமாக இன்சமாம் உல் ஹக், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இருவரையும் பதவியை விட்டு தூக்கி விடுவார்கள் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது.

Story first published: Thursday, June 20, 2019, 7:50 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+