For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மிரட்டல் அடி.. ஆஸி. வீரர் ஹெல்மட்டை கழட்டி.. வாயை உடைத்த ஜோப்ரா ஆர்ச்சர்.. திகில் அடைந்த ஆஸி!

Recommended Video

ஆஸி. வீரர் வாயை உடைத்த ஜோப்ரா ஆர்ச்சர்

பிர்மிங்காம் : ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் அலெக்ஸ் கேரி மோசமான முறையில் காயமடைந்தார்.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சு மின்னல் வேகத்தில் இருந்தது. அவர் அவ்வப்போது அசுர வேகத்தில் பவுன்சர் வீசி மிரட்டி வந்தார்.

அப்படி அவர் வீசிய ஒரு பவுன்சர், கடுமையான முறையில் அலெக்ஸ் கேரியை தாக்கியது. பலமாக காயமடைந்தார் கேரி.

ஆஸி. பேட்டிங் சரிவு

ஆஸி. பேட்டிங் சரிவு

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. 14 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து பரிதாபமாக இருந்தது. பின்ச் 0, வார்னர் 9, ஹேண்ட்ஸ்கோம்ப் 4 ரன்கள் எடுத்து 6.1 ஓவர்களுக்குள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

அலெக்ஸ் கேரி வந்தார்

அலெக்ஸ் கேரி வந்தார்

ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்கி வந்த அலெக்ஸ் கேரியை, அனுப்பி விக்கெட் வீழ்ச்சியை தடுக்க முடிவு செய்தது ஆஸ்திரேலியா. அலெக்ஸ் கேரி உலகக்கோப்பை லீக் போட்டிகளில் அந்த அணியை பல முறை காப்பாற்றி இருந்தார். அதே போல இந்த முறையும் அணியை காப்பாற்ற களமிறங்கினார்.

அந்த பவுன்சர்

அந்த பவுன்சர்

எட்டாவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டார் அலெக்ஸ் கேரி. ஜோப்ரா ஆர்ச்சர் மின்னல் வேகத்தில் பவுன்சர் வீசினார். பவுன்சரை கண்டதும், பேட்டை கீழே இறக்கி, கீழே சாய்ந்து தப்பிக்க நினைத்தார் கேரி.

திகில் அடைந்த ஆஸி.

எனினும், பந்து அவரின் தாடைப் பகுதியில் பலமாக தாக்கியது. பந்து தாக்கிய வேகத்தில் ஹெல்மட் கழன்று விழுந்தது. அதை கேட்ச் பிடித்து ஹிட் விக்கெட் ஆகாமல் தப்பித்தார் கேரி. காயம் பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வடிந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியினர் மிரண்டு போய் இருந்தனர்.

போராடினார்

போராடினார்

காயத்க்கு முதல் உதவி செய்து கொண்டே வீரத்தோடு பேட்டிங் செய்தார் அலெக்ஸ் கேரி. 5 பந்துகள் சந்தித்து இருந்த போது அவர் காயமடைந்தார். அதன் பின் 70 பந்துகள் வரை சந்தித்து 46 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் உயர பெரும் உதவி செய்தார்.

அனில் கும்ப்ளே மாதிரி..

அனில் கும்ப்ளே மாதிரி..

அனில் கும்ப்ளே ஒருமுறை இதே போல தாடைப் பகுதியில் காயமடைந்து கட்டுப் போட்டுக் கொண்டே விளையாடியது நினைவிருக்கலாம். அதே போலவே கட்டு போட்டுக் கொண்டு அவரைப் போலவே அணிக்காக போராடினார் கேரி.

Story first published: Thursday, July 11, 2019, 18:43 [IST]
Other articles published on Jul 11, 2019
English summary
Cricket World cup 2019 : Jofar Archer hit Alex Carey chin with a nasty bouncer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+