Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் ஷங்கருக்கு அடுத்து ஜாதவ் நீக்கப்படுவார்.. உள்ளே வரும் ஜடேஜா.. இந்திய அணியில் திடுக் மாற்றம்!

பிர்மிங்காம் : இந்திய அணியின் இருந்து கேதார் ஜாதவ் நீக்கப்படலாம் என்ற தகவல் இந்திய அணி கூடாரத்தில் இருந்து கசிந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா கடந்த மூன்று போட்டிகளாக சரியாக பேட்டிங் ஆடவில்லை என்ற விமர்சனத்தை பெற்று வந்தது. குறிப்பாக தோனி, ஜாதவ் பேட்டிங் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டது.

ஜாதவ் நிதானம்

ஜாதவ் நிதானம்

கேதார் ஜாதவ் ஆப்கானிஸ்தான் போட்டியில் கடைசி 15 ஓவர்களில் முழுமையாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு பெற்றார். அந்தப் போட்டியில் அவர் மிகவும் நிதானமாக பேட்டிங் செய்தார். அந்தப் போட்டியில் அவர் அடித்த அரைசதம் விமர்சனத்துக்கு உள்ளானது.

இங்கிலாந்து போட்டி

இங்கிலாந்து போட்டி

வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஜாதவ். அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், கடைசி 4 ஓவர்களில் தோனியுடன் சேர்ந்து மிகவும் பொறுமையாக சிங்கிள் ரன் சேர்த்தார். ஓவருக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜாதவ் அப்படி ஆடியது விமர்சனம் செய்யப்பட்டது.

அணியில் இருந்து நீக்கம்

அணியில் இருந்து நீக்கம்

தோனியும் விமர்சிக்கப்பட்டார் என்றாலும் அவர் மூத்த வீரர் என்பதாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருந்தது உள்ளிட்ட காரணங்களால் அணி நிர்வாகத்தின் ஆதரவை பெற்றார். ஆனால், கேதார் ஜாதவ் சரியாக ஆடாத நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நீக்கப்படுவார், அணியில் இடம் பெற மாட்டார் என்று கூறப்படுகிறது.

ஜடேஜா

ஜடேஜா

அவருக்கு பதில் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடிப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஜடேஜா இதுவரை அணியில் இடம் கிடைக்காமல் வெளியே அமர்ந்து இருக்கிறார். இங்கிலாந்து போட்டியில் ஜடேஜா மாற்று வீரராக கேட்ச் பிடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஷங்கர் நீக்கம்

விஜய் ஷங்கர் நீக்கம்

முன்னதாக விஜய் ஷங்கர் உலகக்கோப்பை அணியில் இருந்தே நீக்கப்பட்டார். அவர் காயம் அடைந்ததாக நம்ப முடியாத காரணத்தை கூறி அனுப்பி வைத்த இந்திய அணி, அவருக்கு பதில் மயங்க் அகர்வாலை அணியில் சேர்த்துள்ளது.

Story first published: Monday, July 1, 2019, 23:48 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+