Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவமே! விஜய் ஷங்கரை மிக மோசமாக அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்!

லண்டன் : உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெற உள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் விஜய் ஷங்கர் குறித்து கிண்டலடித்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை இந்தியாவிடம் தோல்வி அடைந்தால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை பெறுவதில் சிக்கலான நிலையை அடையும்.

எனவே, இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும் என்பதை வைத்து, விஜய் ஷங்கரை கிண்டல் அடித்துள்ளார் கெவின் பீட்டர்சன்.

விஜய் ஷங்கர் சரியில்லை

விஜய் ஷங்கர் சரியில்லை

விஜய் ஷங்கர் மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்பு பெற்றும், பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அவரது பேட்டிங் விமர்சனத்துக்கு உள்ளானது. அடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என பலரும் கூறினர்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

விஜய் ஷங்கருக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்களும் அதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். எனினும், அந்த மாற்றம் நடப்பது போன்ற எந்த தகவலும் இந்திய அணியிடம் இருந்து வரவில்லை.

பீட்டர்சன் பதிவு

பீட்டர்சன் பதிவு

இந்த நிலையில், பீட்டர்சன் தன் ட்விட்டர் பதிவில் இப்படி கூறி இருக்கிறார். "அன்புள்ள கோலி, ரவி (சாஸ்திரி), தயவு செய்து விஜய் ஷங்கரை நீக்கி விடாதீர்கள். அவர் தன் இயல்புக்கு வந்து கொண்டு இருக்கிறார். நாளைய போட்டியை அவர் உங்களுக்கு வென்று கொடுப்பார். ரிஷப் பண்ட் பற்றி சிந்திக்காதீர்கள். அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறும் அளவுக்கு தயாராக இன்னும் மூன்று வார காலம் ஆகும்"

அர்த்தம் இதுதான்

அர்த்தம் இதுதான்

இந்த பதிவின் மூலம் பீட்டர்சன், சரியாக ஆடாத விஜய் ஷங்கரை அணியில் ஆட வைத்தால் இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதோடு, அதிரடி வீரர் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்காமல் இருப்பதையும் கிண்டல் அடித்துள்ளார்.

அவமானம்

உண்மையில், விஜய் ஷங்கரை மறைமுகமாக மோசமாக அவமானப்படுத்தி இருக்கிறார் கெவின் பீட்டர்சன். ஏற்கனவே, நிதாஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் பந்தை அடிக்க முடியாமல் விஜய் ஷங்கர் திணறியதால் ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். உலகக்கோப்பை தொடரிலும் அது தொடர்கிறது.

Story first published: Saturday, June 29, 2019, 21:18 [IST]
Other articles published on Jun 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+