Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முட்டாள்தனமா ஷாட் அடிச்சு அவுட் ஆகுறாரு.. இந்திய வீரரை கடுமையாக விமர்சித்த வெங்சர்க்கார்!

Recommended Video

WORLD CUP 2019: Dilip Vengsarkar Criticize Rahul | கேஎல் ராகுலை கடுமையாக விமர்சித்த வெங்சர்க்கார்!

மும்பை : இந்திய அணியில் துவக்க வீரராக சமீபத்தில் வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார் முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார்.

ராகுல் ஐபிஎல் தொடரிலும், உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக இறங்கிய போட்டியிலும் சிறப்பாகவே ஆடினார்.

எனினும், அவரது குற்றத்தை தேடி விமர்சித்துள்ளார் வெங்சர்க்கார். அப்படி என்ன சொன்னார்?

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டியில் ராகுல் 57 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராகுல் அந்தப் போட்டியில் மிக நிதானமாக ரன் சேர்த்தார். அது மட்டுமே சிலரால் விமர்சிக்கப்பட்டது. ஆனால், வெங்சர்க்கார் வேறு ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டி குற்றம் சுமத்தியுள்ளார்.

வெங்சர்க்கார் விமர்சனம்

வெங்சர்க்கார் விமர்சனம்

ராகுல் பெரிய அளவில் ரன் அடிக்கும் திறன் பெற்றவர். பாகிஸ்தான் போட்டியில் அவர் சதம் அடித்திருக்க வேண்டும். ஆனால், அவர் தன் விக்கெட்டை விட்டுக் கொடுத்தார். அவர் சில முட்டாள்தனமான ஷாட்களை ஆடினார். அப்படி ஒரு ஷாட் ஆடலாம் நான் யாருக்கும் சொல்ல மாட்டேன். என்று கூறி ராகுலை விமர்சித்தார் வெங்சர்க்கார்.

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

பொறுமையாக, கொஞ்சம் சுயநலமாக பேட்டிங் செய்கிறார் ராகுல். எனினும், அதையும் மீறி முட்டாள்தனமாக ஷாட் ஆடி சதம் அடிக்கும் வாய்ப்புகளை, வெற்றிகளை நழுவ விடுகிறார். ராகுல் 150-170 ரன்கள் அடிக்கக் கூடியவர். ஆனால், அவர் அடிக்கும் தவறான ஷாட்களால் அவர் அதை தவற விடுகிறார் என்கிறார் வெங்சர்க்கார்.

ஐபிஎல் பார்ம்

ஐபிஎல் பார்ம்

ராகுல் ஐபிஎல் தொடரில் தான் தன் பார்மை மீட்டு எடுத்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய ராகுல், போட்டிக்கு போட்டி ரன் குவித்து அசத்தினார்.

இனி செய்யக் கூடாது

இனி செய்யக் கூடாது

ஆனால், வெங்சர்க்கார் கூறுவது போல தவறான சில ஷாட்களை அவர் ஆடாமல் இருந்தால், அவர் மேலும் ரன் குவிக்கவும், சதம் அடிக்கவும் வாய்ப்பாக இருக்கும். என்ன செய்யப் போகிறார் கேஎல் ராகுல்?

Story first published: Thursday, June 20, 2019, 23:47 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+