For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் இன்னும் 2 வருடம் ஆடணும்.. இவர் 5 விக்கெட் எடுக்கணும்.. இந்திய வீரர்களை புகழ்ந்து தள்ளிய மலிங்கா

Recommended Video

WORLD CUP 2019 | MALINGA PRAISES DHONI | இந்திய வீரர்களை புகழ்ந்து தள்ளிய மலிங்கா- வீடியோ

லீட்ஸ் : இலங்கை அணியின் மூத்த வீரர் லசித் மலிங்கா, தோனி, பும்ரா குறித்தும், இந்திய அணி குறித்தும் புகழ்ந்து தள்ளினார்.

தோனி சிறந்த பினிஷர். அவர் இன்னும் ஒரீரு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கூறினார்.

இலங்கை அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. அடுத்து இந்திய அணியை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் தான் மலிங்கா, இந்திய அணி குறித்தும், பும்ரா, தோனி குறித்தும் விரிவாக பேசினார்.

சிறந்த பினிஷர்

சிறந்த பினிஷர்

அவர் கூறுகையில், தோனி இன்னும் ஒரீரு ஆண்டுகள் கிரிக்கெட் ஆட வேண்டும். கடந்த பத்து வருடங்களில் அவர் தான் சிறந்த பினிஷர். எதிர்காலத்திலும் இதில் அவரை யாரும் வீழ்த்த முடியாது. அவரது அனுபவத்தையும், சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் விதத்தையும், இளம் வீரர்களுக்கு அவர் கற்றுத் தர வேண்டும்.

அனுபவம்

அனுபவம்

இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி மூலமாக நல்ல அனுபவத்தை பெற்றுள்ளது. அதனால் தான் அவர்கள் வெற்றிகரமான அணியாக வலம் வருகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் எந்த அணியையும் வீழ்த்தும் அளவுக்கு அவர்கள் நல்ல அணி.

அணியில் நல்ல வீரர்கள்

அணியில் நல்ல வீரர்கள்

விராட் கோலி வசதியான நிலையில் இருக்கிறார். காரணம், இந்திய அணியிடம் நல்ல வீரர்கள் உள்ளனர். ஐபிஎல் தொடரில் அவர்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு அணியில் தங்கள் இடம் என்ன என்பது தெளிவாக தெரியும். அதனால், விராட் அதிகமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை.

துல்லியம்

துல்லியம்

பும்ரா, ஷமி இருவரும் துல்லியமான பந்துவீச்சாளர்கள். ஷமி, 5 விக்கெட், 3 விக்கெட் என எடுக்கக் கூடிய வீரர். ஒவ்வொரு முறை அவர் பந்தை எடுக்கும் போதும் அது எந்தளவு துல்லியமாக இருக்கும் என்பது அவருக்கு தெரியும். பும்ரா இறுதி ஓவர்களில் பந்து வீசுவதில் அனுபவம் வாய்ந்தவர். அவர் அழுத்தமான சூழ்நிலைகளை கையாளக் கூடியவர். அவர்களிடம் நல்ல கூட்டணி உள்ளது.

5 விக்கெட் எடுப்பார்

5 விக்கெட் எடுப்பார்

அவர்களிடம் இரண்டு உண்மையான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வெற்றிகரமான அணியாக இருக்கிறார்கள். பும்ரா இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் உலகக்கோப்பையில் 5 விக்கெட் வீழ்த்துவார் (ஒரே போட்டியில்), என காத்துக் கொண்டு இருக்கிறேன். அவர் அரையிறுதியில் 5 விக்கெட்கள் வீழ்த்தினால், இந்தியா இறுதிக்கு முன்னேறும் என்று கூறினார் மலிங்கா.

Story first published: Friday, July 5, 2019, 11:08 [IST]
Other articles published on Jul 5, 2019
English summary
Cricket World cup 2019 : Malinga wants Dhon to play another two years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+