Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயசானாலும் விட்டுக் கொடுக்காத “அங்கிள்” மலிங்கா.. தன் மாணவருடன் கடைசியாக மோதப் போகிறார்!

லீட்ஸ் : லசித் மலிங்கா முன்பு போல அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் இல்லை. சில ஆண்டுகள் முன்பு வரை அவரிடம் இருந்த சக்தி இப்போது அவரிடம் இல்லை.

எனினும், 35 வயது ஆகும் மலிங்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். முன்பு போல பேட்ஸ்மேன்களை மிரள வைக்கவில்லை என்றாலும், விக்கெட்கள் வீழ்த்தும் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

தன் இளமை காலத்தில் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசிய மலிங்கா, இப்போது 130 கிலோமீட்டர் வேகத்தில் தான் பந்து வீசி வருகிறார். பேட்ஸ்மேன்கள் பந்து குறைவான வேகத்தில் வருகிறது என்றாலும், மலிங்கா பந்துவீச்சை எப்படி ஆடலாம் என்ற பதில் இல்லாமல் தான் இருக்கின்றனர்.

ஸ்டம்ப்புகளை தகர்த்து எறிகிறார்

ஸ்டம்ப்புகளை தகர்த்து எறிகிறார்

மலிங்காவை "அங்கிள்" என்று சிலர் கேலி செய்கிறார்கள். ஆனால், இப்போதும் மலிங்கா பேட்ஸ்மேன்களை முட்டாளாக்கி, அவமானப்படும் வகையில் ஸ்டம்ப்புகளை தகர்த்து எறிகிறார். உலகக்கோப்பை தொடரில் வலுவான இங்கிலாந்து அணியை கூட ஆட்டம் காண வைத்தார்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மலிங்காவின் எதிர்காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. தன் சொந்த மண்ணில் அவர் ஓய்வு பெறலாம் என கூறப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட தயாராக இருக்கிறார்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

சர்வதேச டி20 போட்டிகளில் மலிங்கா 97 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 378 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். தற்போது தன் நாட்டுக்காக இன்னும் டி20யில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

இது முக்கியம்

இது முக்கியம்

இது குறித்து மலிங்கா கூறுகையில், நாங்கள் 2020 டி20 உலகக்கோப்பையில் விளையாடியே ஆக வேண்டும். நாங்கள் அதில் விளையாட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. ஒருநாள் போட்டிகளில் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை கிரிக்கெட் போர்டை ஆலோசிக்காமல் கூற முடியாது என்றார்.

அந்த சம்பவம்

அந்த சம்பவம்

உலகக்கோப்பையில் மலிங்கா குறித்த புகழ்பெற்ற சம்பவம் 2007இல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நடந்தது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 210 ரன்களை சேஸிங் செய்து கொண்டு இருந்தது. 206 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தது. அப்போது மலிங்கா வரிசையாக நான்கு பந்துகளில், ஷான் பொல்லாக், ஜஸ்டின் கெம்ப், ஜாக்கஸ் காலிஸ் மற்றும் மக்காயா நிடினியை வீழ்த்தினார்.

வயதாகி விட்டது

வயதாகி விட்டது

அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றாலும், மலிங்கா குறித்தே அதிகம் பேசப்பட்டது. அப்போது போல இப்போது தன் வயது மற்றும் உடல் தனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டுள்ள அவர், யார்க்கர் மற்றும் வேகமான பந்துவீச்சை தாண்டி, வேறு விக்கெட் எடுக்கும் வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டுள்ளார்.

கட்டுப்படுத்த முயல்கிறேன்

கட்டுப்படுத்த முயல்கிறேன்

இந்த உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் 12 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இது பற்றி கேட்டால், எனக்கு அதிக வயதாகி விட்டது என்று சிரிக்கிறார் மலிங்கா. முன்பு போல பேட்ஸ்மேன்களை தாக்க முடியவில்லை என்றாலும், போட்டியை, சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முயன்று வருகிறேன். இங்கிலாந்து போட்டியில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை சரியான நேரத்தில் வீழ்த்தியது தான் என் சிறந்த தருணம் என்றார்.

பும்ராவுடன் மோதல்

பும்ராவுடன் மோதல்

இங்கிலாந்தை வீழ்த்திய அதே மைதானத்தில் இலங்கை அணி இந்தியாவை சந்திக்க உள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசி வரும் பும்ரா, மலிங்காவுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தன் பந்துவீச்சை வளர்த்துக் கொண்டவர். அவருடைய வளர்ச்சியை பற்றி பேசினார் மலிங்கா.

பும்ராவின் வளர்ச்சி

பும்ராவின் வளர்ச்சி

மலிங்கா நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அவருடன் 2013 முதல் இருக்கிறேன். அவர் கற்றுக் கொள்ள அதிக ஆர்வம் கொண்டவர். வேகமாகவும் கற்றுக் கொள்வார். விஷயங்களை நன்றாக புரிந்து கொள்வார். இதுபோன்ற குணங்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளராக மாறி விடுவார்கள் என்றார் மலிங்கா.

கடைசி சந்திப்பு

கடைசி சந்திப்பு

மானசீக குரு மலிங்காவும், அவரிடம் வித்தைகளை கற்றுக் கொண்ட பும்ராவும் ஒருநாள் போட்டிகளில் சந்தித்துக் கொள்ளும் கடைசி போட்டியாக இந்த உலகக்கோப்பை போட்டி அமையும். இருவரும் தங்கள் அணிகளுக்காக என்ன செய்யப் போகிறார்கள்?

Story first published: Saturday, July 6, 2019, 10:44 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+