Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடும் விமர்சனம்.. தடுமாறும் தோனி.. விட்டுக் கொடுக்காத கேப்டன் கோலி!

பிர்மிங்காம் : தோனி தற்போது பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். அதனால், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

எனினும், இங்கிலாந்து போட்டிக்கு முந்தைய தினம் பேட்டி அளித்த கேப்டன் விராட் கோலி தோனியை விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

தோனி விமர்சனங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அலட்டிக் கொள்ள மாட்டார் என்பதே உண்மை.

கண்டுபிடிக்க முடியாது

கண்டுபிடிக்க முடியாது

தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென தொடரின் பாதியில் ஓய்வு பெற்ற போதும், 2017ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகள் கேப்டன் பதவியை துறந்த போதும் பிசிசிஐ அனுப்பிய மெயில் மூலம் தான் அனைவருக்கும் தகவல் கூறப்பட்டது. இந்த முடிவுகள் குறித்து அதற்கு முன்பு யாருக்குமே தெரியாது. தோனியின் முகத்தை வைத்து எதையும் கண்டுபிடித்து விட முடியாது.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போட்டியில் 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். சச்சின் போன்ற ஜாம்பவான்களே தோனியை விமர்சித்தனர். வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் 8 ரன்கள் எடுத்து இருந்த போது ஸ்டம்பிங் வாய்ப்பில் அதிர்ஷ்டவசமாக தப்பினார். அந்தப் போட்டியில் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வந்த தோனி கடைசி ஓவரில் ஓஷேன் தாமஸ் பந்துவீச்சில் 16 ரன்கள் சேர்த்து ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்திக் கொண்டார்.

இன்னும் கடினம்

இன்னும் கடினம்

தோனி குறித்து தோனியே மகிழ்ச்சியோடு இருக்க மாட்டார். குறிப்பாக, சுழற் பந்துவீச்சிலும், மித வேகப் பந்துவீச்சிலும் ரன் எடுக்க தடுமாறுவது குறித்து கவலையில் தான் இருப்பார். உலகக்கோப்பை தொடரின் இறுதியை நோக்கி செல்லச் செல்ல இது இன்னும் அதிகரிக்கும். காரணம், அதிக வெயிலின் காரணமாக பிட்ச்கள் மிகவும் மந்தமாக மாறி விடும். பந்துவீச்சாளர்கள் பிட்ச்களுக்கு நன்றாக பழகி விடுவார்கள்.

தோனியின் பயிற்சி

தோனியின் பயிற்சி

இங்கிலாந்து போட்டிக்கு முன் தோனி பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருடன் நிற்கவில்லை. தோனி தான் விரும்பிய வண்ணம் பயிற்சி செய்து வந்தார். முதலில் த்ரோடவுன் பயிற்சி மேற்கொண்ட தோனி, அடுத்து வெளியில் இருந்து வந்த இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஒருவர் பந்துவீச்சில் பயிற்சி மேற்கொண்டார்.

கவலை இல்லை

கவலை இல்லை

அந்தப் பயிற்சியிலும் தோனி புதிதாக எந்த முயற்சியும் செய்யவில்லை. களத்தில் எப்படி பேட்டிங் செய்தாரோ, அதே போல தான் பயிற்சி செய்தார். தோனி பயிற்சி முடிந்து செல்லும் போதும் எந்த கவலையும் இல்லாமல் செய்தியாளர்களிடம் ஜோக் அடித்துக் கொண்டே தான் சென்றார்.

கோலி ஆதரவு

கோலி ஆதரவு

தோனியின் பேட்டிங் பார்ம் கவலை அளிக்கும் வகையில் இருந்தும், கேப்டன் விராட் கோலி தொடர்ந்து தோனிக்கு ஆதரவாக பேசி வருகிறார். கோலி கூறுகையில், தோனிக்கு என்ன செய்ய வேண்டும் என நாம் கூற வேண்டியதில்லை. நாங்கள் அவரை முழுமையாக நம்புகிறோம். ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து விமர்சனம் செய்வது சரியல்ல. யார் வேண்டுமானாலும் பேட்டிங்கில் தடுமாறலாம் என்றார்.

Story first published: Sunday, June 30, 2019, 10:11 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+