Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாம மேட்ச் நடத்துறீங்க? பொங்கி எழும் கிரிக்கெட் ரசிகர்கள்!

Recommended Video

WORLD CUP 2019 FINALS | இங்கிலாந்தின் வெற்றிக்கு எதிராக பொங்கும் பிரபலங்கள்- வீடியோ

லண்டன் : அதிக பவுண்டரி அடித்தது யார் என்ற கணக்கை வைத்து உலகக்கோப்பை தொடரின் சாம்பியனாக ஆகியுள்ளது இங்கிலாந்து.

இதனை கிரிக்கெட் ரசிகர்கள் வன்மையாக கண்டித்து வருகிறார்கள். பவுண்டரி வைத்து எப்படி ஒரு மிக முக்கியமான தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கலாம். விக்கெட் வைத்து தேர்வு செய்து இருக்கலாமே என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் ஒரு நாடு வெளிநாட்டு மக்களை தன் நாட்டிற்கு அழைத்தது. வரலாற்றில் பல கறைகளை சுமந்த, பல நாடுகளை அடிமைப்படுத்தி தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய இங்கிலாந்துதான் அந்த நாடு. வெளிநாட்டில் இருந்து தன் நாட்டிற்கு குடியேறும் மக்களை கொண்டாட தொடங்கியது இங்கிலாந்து. அந்த நிமிடத்தில் இருந்து அந்த நாட்டின் வரலாறு மாற தொடங்கியது.

இங்கிலாந்து வெற்றி எப்படி?

இங்கிலாந்து வெற்றி எப்படி?

இதை அடுத்து சூப்பர் ஓவருக்கு முன் நடந்த போட்டியில் இரு அணிகளில் எந்த அணி அதிக பவுண்டரி அடித்ததோ அந்த அணி தான் வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற மோசமான விதிப்படி, 24 பவுண்டரி (22 ஃபோர், 2 சிக்ஸ்) அடித்து இருந்த இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 16 பவுண்டரி (14 ஃபோர், 2 சிக்ஸ்) அடித்து இருந்தது.

இது நியாயமா?

இது நியாயமா?

பவுண்டரி கணக்கை வைத்து எப்படி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியாளரை முடிவு செய்யலாம்? இரு அணிகளும் ஒரே ஸ்கோர் தானே எடுத்தார்கள். அதை எப்படி எடுத்தால் என்ன? இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தி இருக்கலாம் அல்லது கோப்பையை பகிர்ந்து அளித்து இருக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

விக்கெட் கணக்கு முக்கியம்

விக்கெட் கணக்கு முக்கியம்

மேலும், கிரிக்கெட்டில் திறமையான அணி என்பதை எடுத்துக் காட்டுவது அதிக பவுண்டரியா? அல்லது விக்கெட் இழக்காமல் ஆடுவதா? அப்படி பார்த்தால் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 10 விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. விக்கெட் கணக்கை பார்த்தால் நியூசிலாந்து தான் வெற்றி பெறும்.

அதிக டாட் பால்

அதிக டாட் பால்

மேலும், அதிக பவுண்டரி அடித்த அணி என்றாலும் அதே 241 ரன்களை தான் எடுத்து இருந்தது இங்கிலாந்து. அப்படி என்றால், அதிக டாட் பால் ஆடி உள்ளது. ஒருநாள் போட்டிகளில் அதிக டாட் பால் ஆடிய அணி தான் சிறந்த அணியா? என்கிறார்கள் ரசிகர்கள். ஐசிசி தன் விதிகளை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Story first published: Monday, July 15, 2019, 14:58 [IST]
Other articles published on Jul 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+