Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். கேப்டனை அவர் குழந்தை முன் கிண்டல் செய்த கிறுக்கு ரசிகர்.. அதிர்ந்த கிரிக்கெட் உலகம் - வீடியோ

லண்டன் : 2019 தொடரில் பல மோசமான தோல்விகளால் பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹ்மதை அவர் குழந்தை முன் கேவலமாக கிண்டல் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் கிறுக்கு ரசிகர் ஒருவர்.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததில் இருந்து ரசிகர்கள் பாகிஸ்தான் அணி மீதும், கேப்டன் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். ஆனால், அது எல்லை மீறி போய்க் கொண்டு இருக்கிறது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

தற்போது நடந்த சம்பவம் அதன் உச்சமாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியில் உள்ளது. அந்த ரசிகருக்கு கோபம் இருக்கலாம். ஆனால், அதற்காக இப்படியா தரக்குறைவாக நடந்து கொள்வது என அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம். என்ன தான் நடந்தது?

கேப்டன் மீது விமர்சனம்

கேப்டன் மீது விமர்சனம்

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பர்கர், ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும், போட்டியின் இடையே கொட்டாவி விட்டதும் பெரும் விமர்சனத்துக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. அவர் ஏற்கனவே குண்டாக இருக்கிறார் என கிண்டல் செய்யப்படுவதும் உண்டு.

அனுமதி இன்றி வீடியோ

அனுமதி இன்றி வீடியோ

இந்த நிலையில், இங்கிலாந்தில் குடும்பத்துடன் ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்றுள்ளார் சர்பராஸ். கையில் தன் குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்து சென்றார். அங்கே பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் செல்பி எடுப்பது போல வந்து, அனுமதி இன்றி வீடியோ எடுக்கத் துவங்கினார். இதைக் கண்ட சர்பராஸ் அவரை விட்டு விலகிச் சென்றார்.

கேலி செய்தார்

அப்போது சர்பராஸ்-ஐ அநாகரீகமாக துரத்திச் சென்ற அந்த நபர், அவரைப் பார்த்து "ஏன் இப்படி பன்னி போல குண்டாக இருக்கிறீர்கள்? நீங்கள் பாகிஸ்தானை பெருமைப்படுத்தி விட்டீர்கள்" என மிகக் கீழ்த்தரமாக கிண்டல் செய்தார். சர்பராஸ் அதற்காக சண்டை போடாமல் அமைதியாக விலகிச் சென்றார்.

கடும் எதிர்வினை

கடும் எதிர்வினை

இந்த வீடியோவை ஒரு பாகிஸ்தான் செய்தியாளர் ட்விட்டரில் பகிர்ந்து அந்த நபரை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். இந்த வீடியோவை கண்ட பாகிஸ்தானியர்கள் பெரும்பாலும் அந்த கிறுக்கு ரசிகரை வசைபாடி உள்ளனர்.

கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி

கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி

பெரும்பாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதில்லை. ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில், குடும்பத்துடன் ஒரு கிரிக்கெட் வீரர் தனியாக செல்லும் போது அத்துமீறி வீடியோ எடுத்ததோடு, குழந்தை முன் கீழ்த்தரமாக கிண்டல் செய்தது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இன்று பாகிஸ்தான் கேப்டனுக்கு நடந்தது, நாளை யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம்!!

Story first published: Saturday, June 22, 2019, 8:12 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+