Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாய்லெட்டில் வைச்சு பூட்டினா செமி பைனல் போகலாம்.. பாகிஸ்தானை வைத்து சிரிப்பாய் சிரிக்கும் ரசிகர்கள்!

லண்டன் : பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு பற்றி கிரிக்கெட் உலகமே சிரிப்பாய் சிரித்து வருகிறது.

காரணம், பாகிஸ்தான் தன் கடைசி லீக் போட்டியில் செய்ய முடியாத சாதனை ஒன்றை செய்தால் உலகக்கோப்பை அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறலாம் என கூறப்படுகிறது.

அதை வைத்து பாகிஸ்தான் ரசிகர்களே செமயாக தங்கள் அணியை கலாய்த்து வருகிறார்கள்.

நெட் ரன் ரேட்

நெட் ரன் ரேட்

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை லீக் சுற்றில் தன் கடைசிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தினால், 11 புள்ளிகள் பெற்று, ஏற்கனவே 11 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் போட்டி போடலாம். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் நான்காவது அணி தேர்வு செய்யப்படும்.

என்ன வாய்ப்பு?

என்ன வாய்ப்பு?

நியூசிலாந்து அணியை விட குறைவான நெட் ரன் ரேட் வைத்திருக்கும் பாகிஸ்தான் அணி, வங்கதேச அணியை 300க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் அதிக ரன் ரேட் பெற வாய்ப்புள்ளது. வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தால், இதற்கும் வாய்ப்பில்லை.

பெரிய வெற்றி தேவை

பெரிய வெற்றி தேவை

பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால், 350 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதே போல, 400 ரன்கள் எடுத்தால். 316 ரன்கள் வித்தியாசத்திலும், 450 ரன்கள் எடுத்தால் 322 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற வேண்டும்.

கணக்கு காமெடி

இதெல்லாம் ஆகுற கதையில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால், இந்த கணக்குகளை வைத்து காமெடி செய்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணி தாங்கள் அரையிறுதி செல்ல எத்தனை ரன்களில் வெற்றி பெற வேண்டும் என இப்படித் தான் கணக்கு போட்டு வருகிறார்களாம்.

டாய்லெட்டில் வைச்சு பூட்டிடணும்

நான் எல்லா கணக்கும் போட்டு பார்த்துட்டேன். இது தான் சூப்பர் வழி. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 350 ரன்கள் எடுக்கணும். உணவு இடைவேளையில், வங்கதேச வீரர்களை டாய்லெட்டில் வைச்சு பூட்டிடணும். பாகிஸ்தான் செமி பைனல் போயிடும்!!

934 ரன்கள்

யப்பா.. பாகிஸ்தான் 934 ரன்கள் அடிச்சு, வங்கதேசம் 81 ரன்கள் மட்டும் எடுத்தால் அரையிறுதி போகுமா?

கெஞ்சி கூத்தாடினால்..

பாகிஸ்தான் 1000 ரன்கள் அடிச்சுட்டு, வங்கதேசத்திடம் கெஞ்சி கூத்தாடி சேஸிங் செய்யாதீங்கன்னு கேட்டு, பாகிஸ்தான் வெற்றி பெற்றதா அறிவிச்சா.. நாம அரையிறுதி போக முடியுமா?

ஒரே பந்தில் 286 ரன்கள்

1894இல் ஒரு போட்டியில் பந்து மரத்தில் சிக்கிக் கொண்டது. அப்போது பேட்ஸ்மேன்கள் ஒரே பந்தில் 286 ரன்கள் ஓடினார்கள். பாகிஸ்தான் அணியும் இப்போது அதே போல செய்யலாம். என்ன மைதானத்துக்குள் மரம் இருக்கணும். கூடுதல் பந்துகளும் இருக்கக் கூடாது என பங்கமாக கலாய்த்துள்ளார்.

வங்கதேசம் என்ன செய்யும்?

பாகிஸ்தான் ரசிகர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து பொங்கிய வங்கதேச ரசிகர் ஒருவர் இப்படி கூறி இருக்கிறார். வங்கதேசம் 1099 ரன்கள் எடுக்கும். தமிம் இக்பால் 700, சௌம்யா சர்க்கார் 300 ரன்கள் அடிச்சு நாட் அவுட்டா இருப்பாங்க.. 99 ரன்கள் எக்ஸ்ட்ராஸ். பாகிஸ்தான் 10 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆகும். இப்படி கலாய்த்துள்ளார்.

Story first published: Thursday, July 4, 2019, 23:28 [IST]
Other articles published on Jul 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+