For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிளவுஸ் விவகாரத்தில் தோனியை சீண்டிய பாக். அமைச்சர்.. முட்டாள்கள் என்று கூறி.. அடாவடிப் பேச்சு!

Recommended Video

Cricket World cup 2019 : தோனியை சீண்டிய பாக். அமைச்சர்! அடாவடிப் பேச்சு!- வீடியோ

டெல்லி : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், தோனி ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பர் கிளவுசோடு விளையாடினார்.

ரசிகர்கள் மத்தியில் தோனியை புகழ்ந்து பரவிய இந்த செய்தி, சரியா, தவறா என்ற விவாதத்தில் போய் முடிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் அமைச்சர் இந்த விவகாரத்தில் தேவையே இல்லாமல் அடாவடியாக கருத்து கூறியுள்ளார். தோனியையும் சீண்டியுள்ளார். தோனி பயன்படுத்திய முத்திரை என்ன? பாகிஸ்தான் அமைச்சர் என்ன கூறினார்?

தகுதி உள்ளதா?

தகுதி உள்ளதா?

தோனி பாரா மிலிட்டரியை சேர்ந்த லெப்டினன்ட் கலோனல் ஆவார். பாராஷூட் பிரிவில் அவர் கௌரவ பதவியில் இருக்கிறார். 2011 முதல் லெப்டினன்ட் கலோனலாக இருக்கும் தோனி, 2015இல் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். அவருக்கு "பாலிடான் முத்திரை" எனப்படும் பாராஷூட் பிரிவிற்கு உரிய ராணுவ முத்திரையை பயன்படுத்த அனைத்து தகுதிகளும் உள்ளது.

தோனி தன் விக்கெட் கீப்பர் கிளவுஸில் அந்த முத்திரையை பதித்து உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் பங்கேற்றார். அப்போது அதைக் கண்ட ரசிகர்கள் இணையத்தில் அதை ட்ரென்ட்டிங் ஆக்கினர்.

மாற்றக் கூடாது

மாற்றக் கூடாது

பின்னர் ஐசிசி, இந்த விவகாரத்தில் தலையிட்டு தோனி அந்த முத்திரையை நீக்க வேண்டும் என கோரியது. இதைக் கண்டு கொதித்த ரசிகர்கள் "DhoniKeepTheGlove" என்ற பெயரில் தோனி கிளவுஸை மாற்றக் கூடாது என இணையத்தில் மீண்டும் ட்ரென்ட்டிங் ஆக்கினர்.

விவாதம்

விவாதம்

இது தொடர்பான விவாதங்கள் இந்திய ஊடகங்களில் சூடு பிடித்தது. அதில் ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியின் விவாதத்தை குறிப்பிட்டு, பாகிஸ்தான் அமைச்சர் பாவாத் ஹுசைன் "முட்டாள்கள்" என திட்டியுள்ளார். அவர் கூறியது இது தான் -

அடாவடி கருத்து

அடாவடி கருத்து

"தோனி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடத் தான் சென்றார். மகாபாரத போரில் பங்கேற்க இல்லை. இந்திய ஊடகங்களில் என்ன முட்டாள்தனமான விவாதம் செய்கிறார்கள். இந்திய ஊடகங்களின் ஒரு பகுதி போர் வேண்டும் என்ற மனநிலையில் உள்ளன. அவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான், ரவாண்டா உள்ளிட்ட இடங்களுக்கு படை வீரர்களாக அனுப்ப வேண்டும். முட்டாள்கள்" என்று திட்டித் தீர்த்துள்ளார்.

அனுமதி கேட்ட பிசிசிஐ

அனுமதி கேட்ட பிசிசிஐ

இந்த பாகிஸ்தான் அமைச்சர் இந்திய ஊடகங்களை எதிர்த்து கருத்து கூறினாலும், இடையே "தோனி மகாபாரத போருக்கு செல்லவில்லை" என தோனி ராணுவ முத்திரை அணிந்ததை கோடிட்டு சீண்டியுள்ளார். இதற்கிடையே பிசிசிஐ, ஐசிசியிடம், தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் அணிந்து போட்டிகளில் விளையாட அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, June 7, 2019, 17:29 [IST]
Other articles published on Jun 7, 2019
English summary
Cricket World cup 2019 : Pakistan Minister Fawad Hussain slams Indian media on Dhoni army badge debate.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+