
முதல் போட்டியில் உதை
2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் செமயாக உதை வாங்கி படுதோல்வி அடைந்தது. அப்போதே ஒரு கணக்கு சொல்லப்பட்டது. 1992இல் பாகிஸ்தான் உலகக்கோப்பை வென்ற உலகக்கோப்பை தொடரில், முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் படு தோல்வி அடைந்து இருந்தது பாகிஸ்தான்.

பைத்தியக்காரத்தனம்
அதைச்சுட்டிக் காட்டி, அதே போல 2019இலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது. அப்படி என்றால், பாகிஸ்தான் தான் 2019 உலகக்கோப்பை வெல்லும் என்றார்கள். "அடப் போங்கப்பா.. பைத்தியக்காரத்தனமா இருக்கு" என பலரும் அதை கிண்டல் செய்துவிட்டு கடந்து போனார்கள்.

நம்புற மாதிரியா இருக்கு
வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை அடுத்து வலுவான இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது பாகிஸ்தான் அணி. இப்போதும், 1992இல் முதல் போட்டியில் தோல்வி, இரண்டாம் போட்டியில் வெற்றி என்று கூறினார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள். மற்றவர்கள், "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு" என ஒதுக்கித் தள்ளி விட்டு போனார்கள்.

போட்டி ரத்து
இதற்கடுத்து நடந்தது தான் உச்சகட்டம். 1992இல் பாகிஸ்தான் அணியின் மூன்றாம் போட்டி, மழையால் கைவிடப்பட்டது. அதே போல, 2019 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டி, கைவிடப்பட்டுள்ளது.
1992 ஜோசியம்
இப்போதும், பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்லும் கணக்கு உண்மையாகி உள்ளதால், 2019இலும் பாகிஸ்தான் அணிதான் உலகக்கோப்பை வெல்லுமோ என்ற சந்தேகம் நமக்கே வருகிறது. இந்த 1992 ஜோசியத்தின் படி பார்த்தால், அடுத்த இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வி அடைய வேண்டும்.

இம்ரான் கான் தொடர்பு
இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. 1992இல் பாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் இம்ரான் கான், இப்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமர். அவர் தான் பிரதமராக இருக்கும் போது பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

கண்ணைக் கட்டுதே
அவரது ஆர்வத்துக்கு ஏற்ப, 1992 போலவே விளையாடி வருகிறது பாகிஸ்தான் அணி. அப்படி என்றால் 2019 உலகக்கோப்பை அந்த அணிக்குத் தான்னு உங்களுக்கே இப்ப தோணுதா? ஸ்ஸ்.. இப்பவே கண்ணைக் கட்டுதே!!


Click it and Unblock the Notifications