Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி குறித்து எடுக்கப்பட்ட முடிவு எல்லோரும் சேர்ந்து எடுத்தது தான்.. சமாளிக்கும் ரவி சாஸ்திரி!

லண்டன் : இந்திய அணி அரையிறுதிப் போட்டியுடன் தோல்வி அடைந்து உலகக்கோப்பை தொடரில் வெளியேறி இருக்கிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதில் பதில் அளித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார் ரவி சாஸ்திரி.

பல கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், குறிப்பாக தோனி ஏன் ஏழாவது இடத்தில் களமிறக்கப்பட்டார் என்ற கேள்விக்கும் பதில் கூறினார்.

7ஆம் இடத்தில் தோனி?

7ஆம் இடத்தில் தோனி?

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பண்டியா ஆகியோருக்குப் பின் ஏழாவது இடத்தில் தோனி களமிறங்கினார். ரவி சாஸ்திரி அது பற்றி கூறுகையில், "அது அணியின் முடிவு. எல்லோரும் அதே முடிவில் தான் இருந்தோம். அது எளிதான முடிவு" என்று சமாளித்தார். அணியில் எல்லா முடிவுகளும், கோலி, ரவி சாஸ்திரி தான் எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பது நம்பும் வகையில் இல்லை என்பதே உண்மை.

அனுபவம் தேவை

அனுபவம் தேவை

அடுத்து, "தோனி முன்பே களமிறங்கி, ஆட்டமிழந்தால் சேஸிங்கே அங்கே இருக்காது. அவரது அனுபவம் கடைசி நேரத்தில் தான் தேவைப்பட்டது. அவர் மிகச் சிறந்த பினிஷர். அவரை அங்கே பயன்படுத்தாமல் போனால் அது பெரிய குற்றமாக இருக்கும்" என்றார்

கணக்கு போட்டு ஆடினார்

கணக்கு போட்டு ஆடினார்

தோனி அந்த ரன் அவுட் மட்டும் தவிர்த்து, தோனி தன் மனதில் கணக்கு போட்டுக் கொண்டே இருந்தார். எந்த பந்தை அடிக்கலாம், நீஷம்-இன் கடைசி ஓவரில் எத்தனை ரன்கள் வரை எடுக்கலாம் என கணக்கு போட்டார். அவர் அதை செய்துவிட வேண்டும் என நினைத்தார் என்றார் ரவி சாஸ்திரி.

நான்காம் வரிசை பேட்ஸ்மேன்

நான்காம் வரிசை பேட்ஸ்மேன்

இந்திய அணியில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையாதது உலகக்கோப்பை தொடரில் பெரிய பிரச்சனையாக இருந்தது. அது குறித்து பேசுகையில், ராகுலை அந்த இடத்தில் களமிறக்க முதலில் முடிவு செய்தோம். ஆனால், ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. (அதனால், ராகுல் துவக்க வீரராக மாறினார். அதன் பின் விஜய் ஷங்கர் ஆடினார். அவருக்கும் காயம் ஏற்பட்டது. அதை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார் ரவி சாஸ்திரி .

Story first published: Friday, July 12, 2019, 17:19 [IST]
Other articles published on Jul 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+