Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. பும்ரா ரொமான்டிக்.. இந்திய வீரர்களின் ரகசியங்கள் சொன்ன ஜடேஜா!

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயராகஈ வருகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் நம்பகமான ஆல்-ரவுண்டர் ஜடேஜா ஐசிசி-க்கு ஜாலியான பேட்டி அளித்தார்.

சக இந்திய வீரர்கள் தோனி, ரோஹித் சர்மா, கோலி, பும்ரா என பலர் குறித்து வெளியில் அதிகம் தெரியாத விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்திய அணியில் பல வீரர்களும் ஜாலி மூடில் தான் பெரும்பாலும் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு "ஹாபி" இருக்கும். தோனி, கேதார் ஜாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கு கிளம்பும் முன் கூட விமான நிலையத்தில் காத்திருக்கும் போது, வீடியோ கேம் ஆடிக் கொண்டு இருந்தனர்.

ஜடேஜா பதில்கள்

ஜடேஜா பதில்கள்

இதெல்லாம் இந்திய வீரர்கள் குறித்து நமக்கு வெளியே தெரிந்த சில ஜாலியான விஷயங்கள். ஆனால், ஐசிசி கேட்ட கேள்விகளுக்கு ஜடேஜா சொன்ன பதில்கள், இந்திய வீரர்களின் மறுபக்கத்தையும் காட்டியுள்ளது.

செல்பி எடுப்பவர் யார்?

செல்பி எடுப்பவர் யார்?

ஷிகர் தவான் தான் அணியில் அதிகம் செல்பி எடுப்பவர் என கூறியுள்ளார் ஜடேஜா. சாஹல், ஹர்திக் பண்டியா போன்ற இளம் வீரர்கள் தான் அதிகம் செல்பி எடுப்பார்கள் என்று நினைத்தால், மூத்த வீரர் தவான் தான் விடாமல் செல்பி எடுப்பவர் என்கிறார் ஜடேஜா.

தோனி டான்ஸ்

தோனி டான்ஸ்

அடுத்து யார் மோசமாக டான்ஸ் ஆடுபவர் என்ற கேள்விக்கு, தோனி என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ஜடேஜா. அதே போல, விராட் கோலிக்கு கரோகி பாட்டுப் பாட பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

ரொமான்டிக் காமெடி

ரொமான்டிக் காமெடி

எப்போதும் அமைதியாக இருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள் பார்ப்பது தான் மிகவும் பிடிக்குமாம். பும்ராவின் அமைதிக்கு பின்னாடி ஒரு ரொமான்டிக் ஆள் இருப்பாரோ?

கூகுள்

கூகுள்

சாஹல் டிவி என தன் பெயரில் சக வீரர்களை பேட்டி எடுத்து, அந்த வீடியோக்களை வெளியிட்டு வரும் சாஹல், தன் பெயரை தானே கூகுளில் தேடிப் பார்த்துக் கொள்வாராம். அது மட்டுமின்றி, காலையில் எழுப்பிவிட்டால் கோபமாக வருமாம்.

ரோஹித் சர்மா லேட்

ரோஹித் சர்மா லேட்

நம்ம அதிரடி துவக்க வீரர் ரோஹித் சர்மா பற்றியும் இரண்டு விஷயங்கள் சொல்லி இருக்கிறார் ஜடேஜா. ஒன்று, காபி குடித்துக் கொண்டே இருப்பது. அடுத்தது, பஸ்ஸுக்கு தாமதமாக செல்வது. இது புதுசா இருக்கே!!

ஜிம்மில் குடியிருக்கும் வீரர்

ஜிம்மில் குடியிருக்கும் வீரர்

அப்புறம் எப்போதும் ஜிம்மில் குடியிருக்கும் வீரர் யார் என்ற கேள்விக்கு கண்ணை மூடிக் கொண்டு விராட் கோலி என கூறி இருக்கிறார் ஜடேஜா. ஆமாம், ஜடேஜா எல்லாரைப் பற்றியும் சொன்னாரு? அவரைப் பற்றி ஒண்ணுமே சொல்லிலேயே?

கேலி - கிண்டல்

கேலி - கிண்டல்

தற்போதைய இந்திய அணியில் முன் எப்போதும் இல்லாத அளவு வீரர்கள் நண்பர்களாக வலம் வருகின்றனர். முன்பு சில மூத்த வீரர்கள் மட்டுமே நட்பாக இருப்பார்கள். ஆனால், இப்போது அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கேலி - கிண்டல் செய்து கொண்டு வலம் வருகிறார்கள்.

ஏரியாவாரியாக நட்பு

ஏரியாவாரியாக நட்பு

இது இல்லாமல் ஏரியாவாரியாக பிரித்துக் கொண்டு நட்பாக பழகுபவர்களும் உண்டு. உதாரணத்திற்கு - துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா - தவான். வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார், சுழற் பந்துவீச்சாளர்கள் சாஹல் - குல்தீப் யாதவ், கேப்டன்கள் விராட் கோலி - தோனி, ஸ்டைலிஸ்ட்கள் ஹர்திக் பண்டியா - கேஎல் ராகுல்.. இப்படி!!

எது எப்படியோ, உலகக்கோப்பையை வென்று கொடுத்தால் சரி. இல்லையென்றால், ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

Story first published: Wednesday, May 29, 2019, 18:53 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+