கேட்கவே கஷ்டமா இருக்கே.. சிறப்பாக ஆடினாலும்.. தேற்ற முடியாத வருத்தத்தில் இருக்கிறாராம் ஜடேஜா!
Recommended Video
மும்பை : ரவீந்திர ஜடேஜா உலகக்கோப்பை தொடரின் தோல்விக்கு பின் பெரும் சோகத்தில் இருப்பதாக அவர் மனைவி ரிவாபா தெரிவித்துள்ளார்.
2019 உலகக்கோப்பை தொடரில் முக்கியமான அரையிறுதிப் போட்டியில் ஜடேஜா சிறப்பாக ஆடினார். எனினும், இந்தியா தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.
அது குறித்து ஜடேஜா பெரும் சோகத்தில் இருப்பதாகவும், குறிப்பாக தன் மீதே அவர் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இந்தியா போராட்டம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக ஆடி அணியை கைவிட்டனர். இந்தியா 92 ரன்களுக்கு ஆறு விக்கெட்கள் இழந்து போராடி வந்தது.

ஜடேஜா அசத்தல் ஆட்டம்
அப்போது ஜோடி சேர்ந்த ஜடேஜா - தோனி அணியை மீட்டனர். தோனி நிதானமாக ஆட, ஜடேஜா அதிரடியாக ரன் குவித்தார். 59 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் ஜடேஜா. அடுத்து தோனியும் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா தோல்வி
இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய ரசிகர்கள் அடுத்த சில நாட்களுக்கு ஜடேஜாவின் ஆட்டம் குறித்து தொடர்ந்து பேசி பாராட்டி வந்தனர். அந்தளவிற்கு மோசமான நிலையில் அணி இருந்த போது, ஜடேஜா தன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

சோகத்தில் ஜடேஜா
எனினும், ஜடேஜா தேற்ற முடியாத அளவு வருத்தத்தில் இருப்பதாக அவர் மனைவி கூறி உள்ளார். தான் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், அணி வென்று இருக்கும் எனக் கூறி தன் மீதே கடும் சோகத்தில் இருக்கிறாராம் ஜடேஜா.

முக்கிய தொடர்களில் ஜடேஜா
மேலும் அவர் மனைவி கூறுகையில், ஜடேஜா முக்கிய தொடர்களில் மோசமான சூழ்நிலைகளில் எல்லாம் ஜடேஜா சிறப்பாக ஆடி இருக்கிறார். 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் கூட தன் ஆல்-ரவுண்டர் செயல்பாட்டுக்காக ஆட்டநாயகன் விருது வென்றார் என்று கூறினார்.
இந்த உலகக்கோப்பை ஆட்டத்துக்குப் பின் ஜடேஜா தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்று விட்டார் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications