For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்-லுக்காக மாற்றப்பட்டதா இந்தியாவின் உலகக்கோப்பை அட்டவணை? கிளம்பும் புது சர்ச்சை.. பின்னணி என்ன?

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் ஜூன் 5 அன்று தன் முதல் போட்டியில் ஆடவுள்ளது இந்தியா.

இந்தியா தன் முதல் போட்டியில் ஆடும் முன்னரே மற்ற அணிகள் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாடி இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்திய அணி தாமதமாக உலகக்கோப்பை தொடரை துவங்க உள்ளது.

Cricket World cup 2019 : Reason behind India playing late in world cup

ஏன் இந்தியா மட்டும் இத்தனை காலதாமதமாக உலகக்கோப்பை தொடரில் தன் முதல் போட்டியை ஆடுகிறது? மே 30 அன்று உலகக்கோப்பை தொடர் தொடங்கிய நிலையில், சுமார் 6 நாட்கள் கழித்து இந்திய அணி முதல் போட்டியில் ஆடும் வகையில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டது ஏன்? என பல கேள்விகளுக்கான விடை தற்போது தெரிய வந்துள்ளது.

ஜூன் 5 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ஆடும் தென்னாப்பிரிக்கா அணிக்கு, அது மூன்றாவது லீக் போட்டி ஆகும். இந்திய அணிக்கு முதல் லீக் போட்டி. இப்படி இந்தியா தாமதமாக தன் உலகக்கோப்பை தொடரை துவக்க காரணம் பிசிசிஐ தான்!

ஐசிசி-இன் திட்டப்படி பார்த்தால், இந்தியா ஜூன் 2 அன்று தன் முதல் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆடி இருக்க வேண்டும். ஆனால், பிசிசிஐ வற்புறுத்தியதால் ஐசிசி, இந்திய அணியின் போட்டி அட்டவணையை மாற்றி அமைத்துள்ளது.

அதன் படி இந்தியா தன் ஜூன் 5 அன்று தன் முதல் போட்டியில் பங்கேற்கும். ஏன் இந்த வற்புறுத்தல்? இந்தியா தாமதமாக ஆடுவதில் பிசிசிஐ-க்கு என்ன லாபம்?

இதன் பின்னணியில் ஐபிஎல் இருப்பதாக கூறப்படுகிறது. ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை இறுதி செய்த போது, ஐபிஎல் தொடருக்கான அட்டவணை தயார் செய்யப்படவில்லை.

பிசிசிஐ-ஐ சீரமைக்க அமைக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரையின் படி இந்திய வீரர்கள், ஐபிஎல் தொடருக்கு பின் குறைந்த பட்சம் 15 நாட்கள் இடைவெளிக்கு பின்னரே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் தெரியும் வரை ஐபிஎல் தொடருக்கான அட்டவணை தயாராகவில்லை. மே 12 அல்லது மே 19 அன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்று அந்த தொடர் நிறைவு பெறும் வகையில் இரண்டு திட்டங்கள் பிசிசிஐ வசம் இருந்தது.

ஒருவேளை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 12க்குப் பதில், மே 19 அன்று நடைபெற்று இருந்தால், இந்திய வீரர்களுக்கு 15 நாட்கள் இடைவெளி தேவைப்பட்டு இருக்கும். அதை மனதில் வைத்தே பிசிசிஐ, ஐசிசிஇடம் வற்புறுத்தி, ஜூன் 5க்கு முதல் உலகக்கோப்பை லீக் போட்டியை மாற்றி அமைத்துள்ளது என கூறப்படுகிறது.

Story first published: Monday, June 3, 2019, 20:47 [IST]
Other articles published on Jun 3, 2019
English summary
Cricket World cup 2019 : Reason behind India playing late in world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+