Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா ஆடின விஜய் ஷங்கரை கழட்டி விட்டுட்டு.. ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பா? திடீர் திருப்பம் ஏன்?

சவுதாம்ப்டன் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இடம் பெறப் போவது ரிஷப் பண்ட்-ஆ? அல்லது விஜய் ஷங்கரா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

விஜய் ஷங்கர் பாகிஸ்தான் போட்டியில் சிறப்பாக ஆடினார். ரிஷப் பண்ட் தவானுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டார். இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் ஆப்கானிஸ்தான் போட்டியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் போட்டி

ஆப்கானிஸ்தான் போட்டி

இந்தியா அடுத்து ஆப்கானிஸ்தான் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் காயமடைந்த புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாக ஷமி களமிறங்குவார் என கூறப்பட்டது. பாகிஸ்தான் போட்டியில் சிறப்பாக ஆடிய விஜய் ஷங்கருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது அவருக்கு ஆப்கானிஸ்தான் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். புவனேஸ்வர் குமார் காயமடைந்த நிலையில், அவருக்கு பதில் பந்து வீச வந்த விஜய் ஷங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அத்தினார்.

விஜய் ஷங்கர் காயம்

விஜய் ஷங்கர் காயம்

ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விஜய் ஷங்கர், பும்ரா வீசிய பந்தில் கணுக்காலில் காயமடைந்தார். அவரது காயம் பெரிதாக இல்லை என கூறப்பட்டாலும், அவர் ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.

ரிஷப் பண்ட்டுக்கு இடமா?

ரிஷப் பண்ட்டுக்கு இடமா?

விஜய் ஷங்கருக்கு ஆப்கானிஸ்தான் போட்டியில் ஓய்வு அளித்துவிட்டு, ரிஷப் பண்ட்டை அந்த இடத்தில் ஆட வைத்து பார்க்கலாம் என்று இந்திய அணி நிர்வாகம் சிந்தித்து வருவதாக தெரிகிறது.

பெரிய காயமா?

பெரிய காயமா?

விஜய் ஷங்கருக்கு ஓய்வு கொடுக்கும் அளவுக்கு காயம் பெரிதாக இருக்கலாம் என்றும் ஒரு சிலர் கருதுகின்றனர். ஏற்கனவே, தவான் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். புவனேஸ்வர் குமார் காயத்தால் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். எனவே, மேலும் ஒரு வீரரை இழக்க வேண்டாம் என முன்னெச்சரிக்கையாக இந்திய அணி ஓய்வு முடிவை எடுத்து இருக்கலாம்.

தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா?

தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா?

ரிஷப் பண்ட் ஆப்கானிஸ்தான் போட்டியில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா? அப்படி ஒரு நிலை வந்தால், இடத்தை இழக்கப் போவது யார்? என்ற குழப்பமும் இந்திய அணியில் உள்ளது.

Story first published: Friday, June 21, 2019, 19:11 [IST]
Other articles published on Jun 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+