For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஊருக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துருச்சு.. கையில் கட்டுடன்.. நெகிழ வைத்த தவான் - வீடியோ!

Recommended Video

Cricket World cup 2019 : கையில் கட்டுடன்.. நெகிழ வைத்த தவான் - வீடியோ!

லண்டன் : இந்திய வீரர் ஷிகர் தவான் காயத்தால் அணியில் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

உலகக்கோப்பை தொடரில் இருந்து சோகத்துடன் வெளியேறும் தவான், நெகிழ்ச்சி அடைய வைக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு, அனைவருக்கும் நன்றி கூறினார்.

தவான் காயம்

தவான் காயம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தவான் இடது கை பெரு விரலில் காயமடைந்தார். முதலில் மூன்று வாரத்தில் தவான் காயம் குணமாகும் என கூறப்பட்டது. தேர்வுக் குழு அவரை நீக்கி விட்டு மாற்று வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது.

பிடிவாதம்

பிடிவாதம்

ஆனால், கேப்டன் விராட் கோலி பிடிவாதமாக தவான் அரையிறுதிக்குள் குணமானால் போதும் என கூறினார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தோனி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களும் இந்த முடிவை ஆதரித்ததாக தெரிகிறது.

அணியில் நீக்கம்

அணியில் நீக்கம்

அவர் காயம் குணமாகுமா என காத்திருந்த இந்திய அணி நிர்வாகம், உலகக்கோப்பை தொடரின் முடிவிற்குள் அவர் குணமாக வாய்ப்புகள் குறைவு என மருத்துவர்கள் கூறி விட்ட நிலையில், அவரை அணியில் இருந்து நீக்கினர். ரிஷப் பண்ட் அவருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டார்.

பதிவு

இந்த நிலையில் இந்தியாவுக்கு கிளம்பும் முன் தவான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துரதிர்ஷ்டவசமாக தன் விரல் குணமாகவில்லை. ஆனால், உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும். தான் ஊருக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறி நெகிழ வைத்துள்ளார் தவான்.

நாயகன்

நாயகன்

ஐசிசி தொடர்கள் என்றாலே ஷிகர் தவான் பட்டையைக் கிளப்பி விடுவார். 2015 உலகக்கோப்பை தொடரிலும் அவர் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தார். 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் அதிக ரன்கள் குவித்தார். 2019 உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய 2 போட்டிகளில் ஒரு சதம் அடித்துள்ளார். சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தும் காயத்தால், தொடரில் பாதியில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் தவான்.

Story first published: Thursday, June 20, 2019, 7:43 [IST]
Other articles published on Jun 20, 2019
English summary
Cricket World cup 2019 : Shikar Dhawan gets emotional after ruled out of world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+