Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். வரக் கூடாதுன்னு இந்தியா சதித்திட்டம் போடுதாம்! பைத்தியம் போல உளறும் முன்னாள் பாக். வீரர்கள்!

கராச்சி : முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் இந்திய அணி வேண்டுமென்றே உலகக்கோப்பை போட்டிகளில் தோற்கும் என சகட்டுமேனிக்கு உளறி வருகிறார்கள்.

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் நிறைய சிக்கல் உள்ளது. அதை பயன்படுத்தி இந்திய அணி, பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்யும். போட்டிகளில் வேண்டுமென்றே தோல்வி அடையும் என விஷயம் தெரியாமல் உளறிக் கொட்டி இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் நிலை

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்ல வேண்டும் என்றால் அடுத்து உள்ள இரு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற வேண்டும். அது மட்டுமின்றி, இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலாவது தோல்வி அடைய வேண்டும். குறிப்பாக வங்கதேச அணியையும் பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும். அந்த அணியும் அரையிறுதிக்கான போட்டியில் இருக்கிறது.

அடுத்த போட்டிகள்

அடுத்த போட்டிகள்

பாகிஸ்தான் அணி அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்கிறது. இந்தியா அடுத்து இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை சந்திக்கிறது. இதில் இந்தியா - வங்கதேசம் போட்டியை வைத்து தான் பிதற்றி இருக்கிறார்கள்.

பிதற்றல்

முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்சிக்கந்தர் பக்த் என்பவர் இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தவுடன், தன் கடைசி போட்டிகளில் தோல்வி அடையும். அதன் மூலம் பாகிஸ்தான் அணியை அரையிறுதி செல்ல விடாமல் தடுக்கும் என கூறி இருக்கிறார்.

இதற்கு முன்

அவருக்கு முன் பாசித் அலி என்ற முன்னாள் பாக். வீரர் இதே போல பிதற்றினார். பாசித் அலி கூறுகையில், இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணியை அரையிறுதி செல்ல விடாமல் செய்யும்.

வார்னர் தோல்வி அடைய வைத்தார்

வார்னர் தோல்வி அடைய வைத்தார்

இந்தியா செய்யும் இந்த செயலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. டேவிட் வார்னர் இந்தியாவிடம் வேண்டுமென்றே சரியாக ஆடாமல் ஆஸ்திரேலிய அணியை தோல்வி அடைய வைத்தார். அது போல, இந்திய அணியும் செய்யும் என சம்பந்தமே இல்லாமல் உளறினார்.

வாய்ப்பு உண்டா?

வாய்ப்பு உண்டா?

இவர்கள் இருவரும் கூறுவது போன்ற முட்டாள்தனமான விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கிய காரணம், எளிதான ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் வீழ்த்தி விடும். வங்கதேச அணியை பாகிஸ்தான் வீழ்த்தினால், வங்கதேசம் அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இருந்தாலும், வங்கதேச அணியால் அரையிறுதி செல்ல முடியாது.

ஆசை

ஆசை

தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சையாக பேசினால் புகழ் பெறலாம் என்ற ஆசையில் முன்னாள் பாக், வீரர்கள் பைத்தியக்காரத்தனமாக உளறி இருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேர் உளறப் போகிறார்களோ?

Story first published: Saturday, June 29, 2019, 18:07 [IST]
Other articles published on Jun 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+