For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, ஷமி விஷயத்தில் தவறு செய்தது தான் தோல்விக்கு காரணம்.. சுட்டிக் காட்டும் கங்குலி!

Recommended Video

இவர்கள் விஷயத்தில் தவறு செய்தது தான் தோல்விக்கு காரணம்.. கங்குலி!

லண்டன் : முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முடிவுகளை விளாசி, அரையிறுதிப் போட்டியில் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டது. தொடர்ந்து வெற்றிகளை குவித்தது. இங்கிலாந்து அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது.

லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நான்காம் இடம் பெற்று இருந்த நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது

இது தவறு

இது தவறு

இந்த தோல்வி குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் கட்டுரை எழுதியிருந்தார் கங்குலி. அவர் சொல்ல வந்த சில முக்கிய கருத்துக்கள் - இந்தியா லீக் சுற்றில் சிறப்பாக ஆடியது. ஆனால், அரையிறுதியில் சில ஆச்சரியமான முடிவுகளை எடுத்தது. மூன்று விக்கெட்கள் விரைவாக வீழ்ந்த நிலையிலும், தோனியை கடைசியில் பேட்டிங் செய்ய அனுப்பியது தவறு.

சரியான வீரர் தோனி

சரியான வீரர் தோனி

அந்த கட்டத்தில் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களை வழிநடத்திச் செல்ல சரியான வீரர் தோனி மட்டும் தான். அங்கே இந்திய அணி தவறு செய்து விட்டது. அதே போல, ஷமியை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்பது புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.

பெரிய பயம் இதுதான்

பெரிய பயம் இதுதான்

உலகக்கோப்பை தொடரிலும், அதற்கு முன்பும் கூட இந்திய ரசிகர்களின் பெரிய பயம், ரோஹித், கோலியை முன்பே இழந்து விட்டால் என்ன செய்வது என்பது தான். குறிப்பாக தவான் காயத்துக்குப் பின். அதுதான் முக்கியமான அரையிறுதிப் போட்டியில் நடந்தது. ஐந்து ரன்களுக்கு மூன்று விக்கெட்கள் என்பது இந்திய அணியால் மீண்டு வர முடியாத நிலை ஆகும் என்று கருத்து கூறி இருந்தார் சௌரவ் கங்குலி.

சர்ச்சை

சர்ச்சை

கங்குலி கூறியது போல தோனி ஏழாவது இடத்தில் களமிறங்கியது பெரும் சர்ச்சை ஆனது. மூன்று விக்கெட்கள் இழந்த நிலையில் தோனியை களமிறக்காமல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பண்டியா உள்ளிட்டோரை பேட்டிங் செய்ய அனுப்பி வைத்தார் கேப்டன் கோலி.

கங்குலி விமர்சனம்

கங்குலி விமர்சனம்

அப்போது வர்ணனை செய்து கொண்டு இருந்த சௌரவ் கங்குலி, இந்திய அணியின் முடிவை விமர்சித்துப் பேசினார். தோனி ஏழாவது இடத்தில் களமிறங்கி அரைசதம் அடித்து ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த போதே இந்திய அணியின் தோல்வி உறுதியானது.

Story first published: Friday, July 12, 2019, 19:32 [IST]
Other articles published on Jul 12, 2019
English summary
Cricket World cup 2019 : Sourav Ganguly slams India’s decisions in India vs New Zealand semi final.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+