Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை!!

Recommended Video

இப்படி நடந்ததே இல்லை.. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணமான பெண்

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றிகளை குவித்து, வெற்றிநடை போட்டு வருகிறது ஆஸ்திரேலிய அணி.

உலகக்கோப்பை தொடரின் துவக்கத்தில் இருந்த நிலையை விட, தற்போது வலுவாகவும், நம்பிக்கையுடனும் காட்சி அளிக்கிறது அந்த அணி. இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த வெற்றி நடைக்குப் பின்னால், மறைமுகமாக ஒரு தற்போதைய உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை இருக்கிறார் என்றால் நம்புவது கொஞ்சம் கடினம் தான்.

வெற்றிகள்

வெற்றிகள்

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டி தவிர மற்ற போட்டிகளில் வெற்றிகளை குவித்துள்ளது. அதோடு உலகக்கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

தடுமாற்றம் இருந்தது

தடுமாற்றம் இருந்தது

ஆஸ்திரேலியா அணி துவக்கத்தில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பேட்டிங்கில் தடுமாற்றம் இருந்தது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்வரிசை வீரர் கோல்டர் நைல் 92 ரன்கள் அடித்து அந்த அணியை மீட்டார்.

அந்த தோல்வி

அந்த தோல்வி

இதற்கு அடுத்து அந்த அணி இந்திய அணியை சந்தித்தது. வலுவான இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் தடுமாற்றம் கொண்ட பேட்டிங் எடுபடவில்லை. அந்த அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆஷ்லே பார்டி

ஆஷ்லே பார்டி

அந்த நேரம் பார்த்து ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி பிரெஞ்சு ஓபன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருந்தார். அவரது கிராண்ட்ஸ்லாம் வெற்றி ஒரு வகையில் ஆஸ்திரேலிய அணியின் தூண்டுகோலாக மாறியது. எப்படி?

கிரிக்கெட் - டென்னிஸ்

கிரிக்கெட் - டென்னிஸ்

அவர் டென்னிஸ் வீராங்கனை என்றாலும், 2015இல் டென்னிஸ்-இல் இருந்து விலகி கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். ஆஸ்திரேலிய உள்ளூர் மகளிர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று, பின் மீண்டும் டென்னிஸ்-க்கே திரும்பி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை புரிந்தார்.

பயிற்சியாளர் யோசனை

பயிற்சியாளர் யோசனை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், அப்போது அளித்த பேட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆஷ்லேவை ஒரு முன் மாதிரியாக கொண்டு தங்கள் தடுமாற்றங்களை மாற்றிக் கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும். தங்களால் வெற்றி பெற முடியும் என அவர்கள் நம்ப வேண்டும் என்றார்.

குவிந்த வெற்றிகள்

குவிந்த வெற்றிகள்

இந்திய அணிக்கு எதிராக பெற்ற தோல்விக்கு பின் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் மாறியது. அடுத்து பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடிய அந்த அணி வெற்றிகளை குவித்தது. இதற்கிடையே, ஆஷ்லே பார்டி மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனை புரிந்தார்.

வாழ்த்திய ஆஷ்லே

ஆஷ்லே பார்ட்டி தான் டென்னிஸில் இருந்தாலும், கிரிக்கெட் போட்டிகளை பார்க்கத் தவறுவதில்லை. உலகக்கோப்பை போட்டிகளை பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியை மைதானத்தில் நேரில் சந்தித்து வாழ்த்தி இருக்கிறார். ஆஷ்லே பார்டியின் டென்னிஸ் வெற்றியும், முன்னேற்றமும், ஆஸ்திரேலிய அணியை பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாக மாறி இருக்கிறது.

Story first published: Wednesday, June 26, 2019, 19:11 [IST]
Other articles published on Jun 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+