For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செமி பைனலுக்கு முன்னேறும் 4 அணிகள் இவங்க தான்.. இந்தியாவுடன் மோதப் போகும் “டாப்” அணி!

Recommended Video

WORLD CUP 2019 | செமி பைனலுக்கு முன்னேறும் 4 அணிகள் இவங்க தான்- வீடியோ

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடர் அரையிறுதி சுற்றுக்கு அருகே வந்துள்ளது. இன்னும் சில போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன.

எனினும், அரையிறுதி செல்லும் நான்கு அணிகள் யார் என்பது இப்போதே தெரிந்து விட்டது. பாகிஸ்தான் அணியின் நிலை மட்டுமே ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. எனினும், அந்த அணி அரையிறுதி செல்ல வாய்ப்பில்லை.

இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ஆனால், அங்கே வலுவான அணியுடன் மோத உள்ளது. அந்த கண்டத்தை தாண்டினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

வெளியேறிய அணிகள்

வெளியேறிய அணிகள்

இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற பத்து அணிகளில் ஐந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன. ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் தான் அந்த ஐந்து அணிகள்.

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் நிலை

பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட தன் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தினால், 11 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணியுடன் நான்காவது இடத்துக்கு போட்டி போடலாம். ஆனால், அப்போதும் அரையிறுதி செல்ல முடியாது.

நடக்காத காரியம்

நடக்காத காரியம்

எனினும், நியூசிலாந்து அணி அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளதால், பாகிஸ்தான் அணியை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். பாகிஸ்தான் அணி, வங்கதேச அணியை 316 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே, நியூசிலாந்து அணியை முந்தி அரையிறுதி வாய்ப்பை பெற முடியும். அது நடக்காத காரியம்.

நான்கு அணிகள் யார்?

நான்கு அணிகள் யார்?

அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் மூன்று அணிகள் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, இதோடு நான்காவதாக நியூசிலாந்து அணி சேரும். இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதியில் மோத உள்ளன.

அரையிறுதிப் போட்டிகள்

அரையிறுதிப் போட்டிகள்

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தும் என்ற கணிப்பின் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிகளும் இப்போதே ஊகிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, நான்காம் இடத்தில் இடம் பிடிக்கும் நியூசிலாந்து அணியுடன் மோதும். இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, மூன்றாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியுடன் மோதும்.

இந்தியா தேறுமா?

இந்தியா தேறுமா?

இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் இடையே சறுக்கினாலும், கடைசி இரண்டு போட்டிகளில் வலுவான அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது. அரையிறுதியில் மீண்டும் அந்த அணி இந்தியாவை வீழ்த்தவே வாய்ப்பு அதிகம். இந்தியா தாக்குப் பிடித்து ஆடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

Story first published: Thursday, July 4, 2019, 11:47 [IST]
Other articles published on Jul 4, 2019
English summary
Cricket World cup 2019 : These are the four teams that reached Semi finals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+