Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சதம் அடித்த “திடீர்” நியூசி. வீரர்.. அவர் மட்டும் வராம இருந்தா டீமில் இடம் உறுதி!!

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியிராத நியூசிலாந்து அணி வீரர் டாம் ப்ளண்டல் வாய்ப்பு பெறுவார் என கூறப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடிய டாம் ப்ளண்டல் சதம் அடித்து அசத்தினார். மாற்று வீரராக அணியில் வாய்ப்பு பெற்ற அவர் சதம் அடித்ததால், உலகக்கோப்பை தொடரின் போது அணியில் அவருக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

Cricket World cup 2019 : Tom Blundell may get a spot in New Zealand World cup squad

நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் டாம் லாதம். அவருக்கு விரலில் காயம் இருந்ததால், உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவருக்கு மாற்றாக, அணியில் இருந்த விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டல் பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் டாம் ப்ளண்டல் சதம் அடித்தார். எனினும், நியூசிலாந்து அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 421 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை திணறடித்தது.

நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் 85, டாம் ப்ளண்டல் 106 ரன்கள் குவித்தனர். இந்த சதம் மூலம் டாம் ப்ளண்டல் உலகக்கோப்பை தொடரில் தன் ஒருநாள் அறிமுகத்தை பெறுவாரா? இதில் ஒரு சிக்கல் உள்ளது.

டாம் லாதம் காயத்தில் இருந்து மீண்டு வரும் பட்சத்தில் அவர்தான் அணியில் இடம் பெறுவார். டாம் ப்ளண்டல் அணியில் வாய்ப்பு பெற முடியாது.

டாம் ப்ளண்டல் குறித்த சுவாரஸ்ய செய்தி ஒன்று உள்ளது. 2017இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் வாட்லிங் என்ற வீரர் காயத்தால் ஆட முடியாத நிலை ஏற்பட்ட போது, திடீரென வாய்ப்பு பெற்றார்.

அந்த டெஸ்ட் போட்டிக்கு பின் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் ப்ளண்டல். அதன் பின் தற்போது தான் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். இப்போதும் பயிற்சிப் போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ஷ்டம் இருந்தால், டாம் ப்ளண்டல் உலகக்கோப்பை தொடரில் தன் ஒருநாள் போட்டி அறிமுகத்தை பெறலாம். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மனது வைத்தால் இது சாத்தியம் தான்.

மார்டின் குப்டில், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட நியூசிலாந்து அணி, உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்வி மட்டுமே இப்போதைக்கு நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

Story first published: Wednesday, May 29, 2019, 15:17 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+