Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பையில் வேகத்தில் மிரட்டும் 5 வீரர்கள் இவங்க தான்.. நம்ம இந்திய அணியில் யாருப்பா இருக்கா?

Recommended Video

World Cup 2019: Top 5 Fast Bowlers: இந்த உலக கோப்பையை மிரட்டும் வேகப்பந்துவீச்சாளர்கள்- வீடியோ

லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக வேகத்தில் பந்து வீசி மிரட்டி வருகின்றனர்.

நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா போட்டி வரை அதிக வேகத்தில் பந்து வீசிய ஐந்து பந்துவீச்சாளர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஐந்து பந்துவீச்சாளர்களுமே கிட்டத்தட்ட 150கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அதிர வைத்துள்ளனர்.

அதிக வேகம்

அதிக வேகம்

இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைப்பதால், வேகப் பந்துவீச்சின் போது கூடுதல் வேகம் கிடைக்கிறது. அது தான் இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக வேகத்தில் வந்து வீசப்பட்டு வருவதன் காரணம். அதிக வேகத்தில் பந்து வீசிய ஐந்து பந்துவீச்சாளர்கள் யார், அதில் இந்திய வீரர்கள் இருக்கிறார்களா?

வஹாப் ரியாஸ்

வஹாப் ரியாஸ்

பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் 149 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்ற ஒரே ஆசிய வீரர் வஹாப் ரியாஸ் மட்டுமே.

லாக்கி பெர்குசன்

லாக்கி பெர்குசன்

நான்காம் இடத்தில் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் இடம் பெற்றுள்ளார். இவரும் 149 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி இருக்கிறார். நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் பவுல்ட் மிகவும் வேகமாக பந்து வீசக் கூடியவர் என்றாலும், அவர் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெறவில்லை.

மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் இந்த உலகக்கோப்பை தொடரில் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். அவர் 152 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியில் இருந்து முதல் ஐந்து இடங்களை பிடித்த வீரர் இவர் மட்டுமே.

ஜோப்ரா ஆர்ச்சர்

ஜோப்ரா ஆர்ச்சர்

சில போட்டிகளிலேயே இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக மாறிய ஜோப்ரா ஆர்ச்சர் 153 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருக்கிறார். இவர் தொடர்ந்து 140+ வேகத்திலேயே பந்து வீசி மிரட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க் வுட்

மார்க் வுட்

முதல் இடத்தையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஒருவர் தான் பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் மார்க் வுட் 154 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி முதல் இடத்தை பிடித்துள்ளார். மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சு தான் இங்கிலாந்து அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம்.

இந்திய வீரர்கள்?

இந்திய வீரர்கள்?

இந்த வரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. இந்திய அணியில் பும்ரா அதிக வேகத்தில் பந்து வீசுகிறார். எனினும், அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் 149 கிலோமீட்டரை தாண்டி பந்து வீசவில்லை.

Story first published: Thursday, June 20, 2019, 19:04 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+