Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா வீசிய யார்க்கர்.. வலியில் துடித்த விஜய் ஷங்கர்.. இந்திய அணியில் பரபரப்பு!! என்ன ஆச்சு?

Recommended Video

Vijay Shankar injured: பும்ரா வீசிய யார்க்கர்.. வலியில் துடித்த விஜய் ஷங்கர்- வீடியோ

சவுதாம்ப்டன் : விஜய் ஷங்கர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது காயமடைந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் ஷங்கர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காயமடைந்ததாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முதல் காயம்

முதல் காயம்

விஜய் ஷங்கர் உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன்பே பயிற்சியின் போது காயமடைந்தார். அதனால், ஒரு பயிற்சிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார், பின்னர், அதில் இருந்து மீண்டு வந்த அவர், அணியில் வாய்ப்பின்றி இருந்தார்.

அணியில் வாய்ப்பு

அணியில் வாய்ப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கப்பட்டார். அந்தப் போட்டியில் அவரால் கடைசி ஓவர்களில் களமிறங்கி பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. எனினும், பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்டு, 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில், விஜய் ஷங்கர் தொடர்ந்து இனி வரும் போட்டிகளில் ஆடுவார் என கூறப்பட்டது. அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார் விஜய். பும்ரா பந்துவீச்சில் அவர் பேட்டிங் பயிற்சி செய்த போது, யார்க்கர் பந்து விஜய் ஷங்கரின் காலில் கடுமையாக தாக்கி உள்ளது.

மீண்டும் காயம்

மீண்டும் காயம்

காயமடைந்த உடன் விஜய் ஷங்கர் வலியில் துடித்ததாக. சொல்லப்படுகிறது. இதனால், அவரது காயம் பெரிய அளவில் இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், பயம் கொள்ளும் அளவுக்கு அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று இந்திய அணி வட்டாரம் கூறி இருக்கிறது.

தவான் நீக்கம்

தவான் நீக்கம்

ஷிகர் தவான் சமீபத்தில் காயமடைந்து உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக அமைந்தது. தவான் நீக்ப்பட்ட நிலையில் தான் விஜய் ஷங்கர் அணியில் வாய்ப்பு கிடைத்து போட்டிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வர் நிலை

புவனேஸ்வர் நிலை

தவான் ஆஸ்திரேலியா போட்டியில் காயமடைந்ததை அடுத்து புவனேஸ்வர் குமார் பாகிஸ்தான் போட்டியில் காயமடைந்தார். அவர் அடுத்த 2 - 3 போட்டிகளில் விளையாட முடியாது. அவருக்கு பதில் ஷமி அணியில் இடம் பெறுவார் என தெரிகிறது.

தொடர்ந்து காயம்

தொடர்ந்து காயம்

இந்திய அணியில் வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்து வருவது கவலையை அதிகரித்துள்ளது. விஜய் ஷங்கருக்கு தற்போது ஏற்பட்ட காயம் பெரிய அளவில் இல்லை என்ற செய்தி ஆறுதலாக அமைந்துள்ளது.

பரிசோதனை முயற்சிகள்

பரிசோதனை முயற்சிகள்

இந்தியா அடுத்து ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அனேகமாக அந்தப் போட்டியில் சில பரிசோதனை முயற்சிகளை இந்தியா செய்து பார்க்கும். விஜய் ஷங்கர் உள்ளிட்ட அனுபவம் குறைந்த வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படலாம்.

Story first published: Thursday, June 20, 2019, 16:44 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+