Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப இது ரொம்ப முக்கியமா? பாகிஸ்தான் போட்டி முடிஞ்ச உடனே பயம் விட்டுப் போயிடுச்சோ!

சவுதாம்ப்டன் : இந்திய அணியின் முக்கிய வீரர்கள் புதிய ஹேர்கட்டுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மூத்த வீரர் தோனி, கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பண்டியா, சாஹல் உள்ளிட்டோர் புதிய ஹேர்கட்டுக்கு மாறி இருக்கிறார்கள்.

புது ஹேர்கட்

பிரபல சிகை அலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு முடி வெட்டி விட்டார் (அல்லது சிகை அலங்காரம் செய்தார்!!). ஏற்கனவே, ஹர்திக் பண்டியா, தோனி - இருவரும் வகை வகையாக ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வார்கள்.

எப்படி இருக்கு?

இந்த நிலையில், ஹக்கீம் செய்த ஹேர்ஸ்டைலுக்கு பின் பண்டியா, தோனி, கோலி, சாஹல் நால்வரும் ஒரே மாதிரி தான் தெரிந்தார்கள். சைடில் மொத்தமாக முடியை காணோம். தோனி, பண்டியாவிற்கு மட்டும் தான் இந்த ஸ்டைல் பொருத்தமாக இருந்தது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

இத்தனை நாள் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால், திடீரென பயிற்சி குறைந்து கொண்டாட்டம் அதிகமாகி விட்டதோ என எண்ணும் அளவிற்கு உள்ளது. பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் தான் இந்த மாற்றம். ஒருவேளை இந்திய வீரர்களுக்கு எப்படியும் அரையிறுதி போய்விடலாம் என்ற எண்ணம் காரணமாக பயம் விட்டுப் போய் விட்டதா?

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என போட்டி அளிக்கக் கூடிய, சம பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இருக்கிறது இந்தியா.

காரணம் கட்டுப்பாடு!

காரணம் கட்டுப்பாடு!

இந்த வெற்றிகளுக்கு காரணம் இந்திய அணிக்கு இருந்த கட்டுப்பாடுகள் தான் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் போட்டி வரை இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்ற கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் போட்டி

ஆப்கானிஸ்தான் போட்டி

இந்தியா அடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் எப்படியும் இந்தியா வென்று விடும் என்ற மனநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம். உலகக்கோப்பை தொடரில் ஒரு மோசமான தோல்வி கூட வீரர்களின் மன உறுதியை குலைத்து விடும் என்பதால், இந்திய வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Story first published: Thursday, June 20, 2019, 18:27 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+