
கோலிக்கு தடையா?
கோலி உலகக்கோப்பை தொடரில் அம்பயர்களின் தவறான முடிவுகளை கண்டு கொந்தளித்து வருகிறார். ஆப்கானிஸ்தான் போட்டியில் அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார் கோலி. ஆனால், அப்போது அவருக்கு அபராதம் விதிக்கவில்லை.

என்ன நடந்தது?
எனினும், வங்கதேசப் போட்டியில் ஷமி பந்துவீச்சில் எல்பிடபுள்யூ கேட்ட போது, ரிவ்யூவில் தவறான தீர்ப்பு கொடுக்கப்பட்டதாக கருதிய கோலி, அம்பயர் ஏறாஸ்மஸ்-இடம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இதற்காக கோலிக்கு போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.

தலைக்கு மேல் கத்தி
அந்த டீமெரிட் புள்ளிதான் பிரச்சனைக்கு வித்திட்டுள்ளது. ஏற்கனவே, 2018 ஜனவரியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலிக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டு உள்ளது. 24 மாதங்களுக்குள் ஒரு வீரர் நான்கு டீமெரிட் புள்ளிகள் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.

முக்கிய போட்டிகள்
மூன்று கிரிக்கெட் போட்டிகளில் எந்தப் போட்டி முதலில் வருகிறதோ, அதில் விளையாட தடை விதிக்கப்படும். தற்போது இரண்டு டீமெரிட் புள்ளிகளுடன் இருக்கும் கோலி, இலங்கை போட்டியில் அம்பயரிடம் எல்லை மீறி, இரண்டு டீமெரிட் புள்ளி பெற்றால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுவார்.

கோலி வம்புக்கு போகாதீங்க
இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டியில், கோலி கோபப்படாமல் இருக்க வேண்டும். அம்பயர் தவறு செய்தாலும், கோலி கண்டும் காணாமல் இருக்க வேண்டும். அதே போல, விக்கெட் கேட்டு அப்பீல் செய்யும் போதும், அளவாகவே செய்ய வேண்டும். அப்போது தான் அவர் தடை பெறாமல் இருக்க முடியும்.

ரோஹித் தலைமை
ஒருவேளை கோலி தடை செய்யப்பட்டால், இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு தலைமை ஏற்பார். இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் உலகக்கோப்பை வெல்லுமா? என ரோஹித் ரசிகர்கள் பகல் கனவு கண்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications