Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக்கா? கேதார் ஜாதவ்வா? ரெண்டு பேரையும் வைச்சு மங்காத்தா ஆடும் கேப்டன் கோலி!

லீட்ஸ் : இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கல் தீராத நிலையில், இந்தியா கடைசி லீக் போட்டியில் விளையாட உள்ளது.

அந்தப் போட்டியை அடுத்து முக்கியமான அரையிறுதிப் போட்டி இருக்கும் நிலையில், இந்திய அணி மிடில் ஆர்டரில் எந்தெந்த வீரர்களை களமிறக்கலாம் என்பதில் தெளிவு பெற வேண்டும்.

ஆனால், கேப்டன் விராட் கோலி கடும் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் இருவரில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

மிடில் ஆர்டர் சிக்கல்

மிடில் ஆர்டர் சிக்கல்

இந்திய அணியை பொறுத்தவரை டாப் ஆர்டரில் இருக்கும் ராகுல், ரோஹித், கோலி ஆட்டமிழந்து விட்டால், மிடில் ஆர்டர் சரியாக ரன் குவிப்பதில்லை. மோசமாக தடுமாறி வருகிறது. குறிப்பாக, ரன் ரேட் குறைவதும் பிரச்சனையாக உள்ளது.

மூன்று வீரர்கள்

மூன்று வீரர்கள்

தற்போதைய அணியில் ரிஷப் பண்ட், தோனி, ஹர்திக் பண்டியா ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே உறுதியாக அணியில் இடம் பெற உள்ளனர். மீதமுள்ள ஒரு இடத்திற்கு யாரை ஆட வைக்கலாம் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

ஜாதவ் மந்தமான ஆட்டம்

ஜாதவ் மந்தமான ஆட்டம்

முதலில் சில போட்டிகளில் கேதார் ஜாதவ் அணியில் இடம் பெற்று வந்தார். அவர் ஆப்கானிஸ்தான் போட்டியில் அரைசதம் அடித்தாலும், மிகவும் பொறுமையாக ரன் குவித்து விமர்சனத்தை எதிர்கொண்டார். இங்கிலாந்து போட்டியிலும் மந்தமாக ஆடி கடும் எதிர்ப்பை சந்தித்தார். அடுத்து அவரை அணியில் இருந்து நீக்கினர்.

தினேஷ் கார்த்திக் ஏமாற்றம்

தினேஷ் கார்த்திக் ஏமாற்றம்

தினேஷ் கார்த்திக் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஜாதவ்வுக்கு பதில் இடம் பெற்றார். அவர் அந்தப் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இவர்கள் தவிர்த்து, ஜடேஜா இருக்கிறார். ஆனால், அவர் முழுமையான பேட்ஸ்மேன் இல்லை. அதனால், மிடில் ஆர்டரில் யாரை ஆட வைப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

ஒரே ஒரு போட்டி

ஒரே ஒரு போட்டி

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றி - தோல்வி, அரையிறுதி வாய்ப்பை பாதிக்காது என்ற நிலையில், இந்தியா பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்கலாம். ஆனால், இந்த ஒரே ஒஉர் போட்டியில் கேப்டன் கோலி சரியான வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தினேஷ் கார்த்திக், ஜாதவ் இருவரில் யாரை மிடில் ஆர்டரில் தேர்வு செய்வார்?

Story first published: Friday, July 5, 2019, 20:29 [IST]
Other articles published on Jul 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+