For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

#RIPactorVijay:விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்...! காண்டாகி கருத்து சொன்ன அஸ்வின்..!!

Recommended Video

Ashwin | விஜய், அஜீத் ரசிகர்கள் மோதல்...! கருத்து சொன்ன அஸ்வின்- வீடியோ

சென்னை: நடிகர்கள் பற்றி தேவையில்லாமல் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து கூறி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வர். பட பூஜை முதல் படப்பிடிப்பு முடியும் வரை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து புளங்காகிதம் அடைவர்.

இந்நிலையில், பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில், நடிகர் விஜய்யை, #RIPactorVIJAY என கலாய்த்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ரசிகர்கள் இத்தகைய செயல்களில் பல நேரங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொள்வது உண்டு.

ரசிகர்கள் டிரெண்ட்

ரசிகர்கள் டிரெண்ட்

ஏற்கனவே, கடந்த மாதம் விஜய் பிறந்த நாளன்று, இதேபோன்று ஹேஷ்டாக்கை, அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். ஆனால் அதற்கு அஜித் ரசிகர்களுக்குள் இடையிலே எதிர்ப்பு கிளம்பியதால், ட்ரெண்ட் செய்து வந்த ஹேக்டாக்கை நிறுத்தினர். பின்னர், என்றும் தல அஜித் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

ஆகஸ்ட் 8 பாடை கட்டு

ஆகஸ்ட் 8 பாடை கட்டு

ஆகஸ்ட் 8 பாடைகட்டு என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். காரணம்.. ஆகஸ்ட் 8ம் தேதி அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகிறது. இந்நிலையில், தற்போது #RIPactorVIJAY என்ற ஹேஷ்டாக் விஜய் ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடிக்க தொடங்கி உள்ளது.

அஸ்வின் ட்வீட்

ரசிகர்களின் இந்த சண்டை குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்னர் ஒரு கல் நமது கிரகத்தை தாக்கியது.

பல பகுதிகளில் வறட்சி

பல பகுதிகளில் வறட்சி

அதனால் வழக்கத்துக்கு மாறாக பருவநிலை மாறி, பல நகரங்கள் பாதிக்கப்பட்டன. நமது நாட்டில் பல்வேறு இடங்களில் வறட்சி நிலவுகிறது. அது குறித்து நல்ல பதிவினை படித்து அதனை பகிரலாம். ஆனால் நமது அழகிய தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் RIP விஜய் என்பதை சமூக அளவில் ட்ரண்ட் செய்து சண்டை போட்டு கொள்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Monday, July 29, 2019, 21:30 [IST]
Other articles published on Jul 29, 2019
English summary
Cricketer ashwin slams netizens for making #RIPactorVijay.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+