பிரியா தலூருக்கு தாலி கட்டி செட்டிலானார் எல்.பாலாஜி
சென்னை: சென்னையில் நடந்த எளிய திருமண நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பிரபல மாடல் பிரியா தலூரை மணந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி.
மிகவும் எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
பாலாஜி, பிரியா திருமணம் காதல் திருமணமாகும்.

முரளி விஜய் வாழ்த்து
திருமணத்தில் பாலாஜியின் நண்பர்களான முரளி விஜய், எஸ்.பத்ரிநாத், அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

சீனிவாசன் வந்தார்
இந்திய கிரிக்கெட்வாரியத்தலைவர் என்.சீனிவாசனும் திருமணத்திற்கு வந்து பாலாஜி தம்பதியை வாழ்த்தினார். வந்ததோடு இல்லாமல் திருமணச் சடங்குகளையும் அமர்ந்து பார்த்தார் சீனிவாசன்.

போட்டோ பிடித்த பத்ரிநாத்
கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், கேமராமேனாக மாறி பாலாஜியையும்,பிரியாவையும் புகைப்படம் எடுத்துத் தள்ளினார். மேலும் திருமணத்திற்கு வந்தவர்களையும் அவர் புகைப்படம் எடுத்தார்.

மும்பையில் வரவேற்பு
பாலாஜி தனது திருமண வரவேற்பை மும்பையில் ஏற்பாடு செய்யவுள்ளார். அதில் கிரிக்கெட் உலகினர்,நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


Click it and Unblock the Notifications