Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய காதலியுடன் ஊர் சுற்றும் இஷான் கிஷன்.. லவ் பேர்ட்ஸாக மாறிய ஜோடி.. யார் இந்த அதிதி?

மும்பை: மாடலிங் துறையைச் சேர்ந்த 25 வயதாகும் அதிதி என்ற இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்த அதிதி ஹூண்டியா என்பது பற்றி பார்க்கலாம்.

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் இஷான் கிஷன். சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரோகித் சர்மா ஆகியோருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர். இதன் காரணமாக உலகக்கோப்பைத் தொடருக்கான விக்கெட் கீப்பர் ரேசில் முன்னணியில் இருக்கிறார்.

Cricketer Ishan Kishan dating instagram influencer and Model Aditi Hundia

இவரை ஐபிஎல் தொடரின் போது மும்பை அணி நிர்வாகம் ரூ.15.25 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது. இதனால் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களில் இஷான் கிஷன் முக்கியமானவராக உள்ளார். எதிர்காலத்திற்கான வீரராக உள்ள இஷான் கிஷன், அண்மையில் கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தினார்.

25 வயதாகும் இஷான் கிஷன், தற்போது மாடலிங் துறையில் உள்ள அதிதி என்பவருடன் காதல் உறவில் இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அதிதி ஹுண்டியா, 2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியா இறுதிப் போட்டியில் பங்கேற்றவர். அதேபோல் சூப்ரா நேஷனல் இந்தியா போட்டியில் 2018ஆம் ஆண்டு பட்டம் வென்றார்.

இவர் இஷான் கிஷனுடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், வங்கதேச ஒருநாள் தொடரின் போது இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். அப்போது இஷான் கிஷனை சந்திப்பதற்காகவே அதிதி ஹூண்டியா வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வங்கதேச ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசிய போது, அவரது புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறினார்.

அதுமட்டுமல்லாமல் இஷான் கிஷன், அதிதி ஆகியோருடன் ஏராளமான முறை காதல் பற்றி கேள்வி எழுப்பிய போதும், இதுவரை இருவருமே பதில் அளிக்கவில்லை. இருவரும் பார்ட்டி ஒன்றில் சந்தித்துக் கொண்டதாகவும், பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இஷான் கிஷனுடன் தொடர்ந்து இணைந்து பேசப்பட்டு வருவதால் அதிதியின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களும் நாளுக்கு நாள் அதிகமாக வருகின்றனர். வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான இஷான் கிஷன், களத்தில் கவனம் சிதறாமல் விளையாடினாலே போதும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Wednesday, August 16, 2023, 12:56 [IST]
Other articles published on Aug 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+