Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்கினார் கே.எல்.ராகுல்.. பாலிவுட் நடிகையுடன் காதல்.. இங்கிலாந்தில் ஜாலி டூர்.. அதிகாரப்பூர்வமானது!

சிக்கினார் கே.எல்.ராகுல்.. பாலிவுட் நடிகையுடன் காதல்.. இங்கிலாந்தில் ஜாலி டூர்.. அதிகாரப்பூர்வமானது!

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், பிரபல பாலிவுட் நடிகையை காதலிப்பது அதிகாரப்பூர்வமாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நடிகைகளை காதலிப்பது வழக்கமானதுதான். ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளையே திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இந்தி நடிகை அதியா ஷெட்டியை காதலித்து வருவது உறுதியாகியுள்ளது.

பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

இந்திய அணி வீரர் கேஎல் ராகுல், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான நடிகை ஆதியா ஷெட்டியை காதலிப்பதாக கடந்த 2 ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அதை சமூக வலைதளங்களின் போடும் பதிவுகள் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக கே.எல்.ராகுலின் பிறந்தநாள் அன்று "என் ஆளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" (Happy Birthday, my person) என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இருந்தார்.

பிசிசிஐ-யிடம் தகவல்

பிசிசிஐ-யிடம் தகவல்

இந்நிலையில் அவர்களின் காதல் அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நீண்ட தொடர் என்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்துக்கு செல்ல பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி புறப்படுவதற்கு முன்னதாக வீரர்களிடம், தங்களுடன் யார் யார் வரவுள்ளனர் என கேட்கப்படும். அதற்கு கே.எல்.ராகுல், தன்னுடன் ஆதியா ஷெட்டி வருவார் என்றும், அவர் தனது (காதலி) பார்ட்னர் என்றும் பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரல்

வைரல்

அதன்படி அவர்கள் இருவரும் இணைந்தே இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். அங்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்த சூழலில் வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்தை ஜாலியாக சுற்றிப்பார்த்து வருகின்றனர். அந்தவகையில் கே.எல்.ராகுல் தனது காதலி ஆதியா ஷெட்டியுடன் இங்கிலாந்தில் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

கே.எல்.ராகுலுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக சென்றுக்கொண்டிருந்தாலும், கிரிக்கெட் வாழ்க்கை சற்று தடுமாற்றத்தில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அவரின் ஃபார்ம் சரியாக இல்லாததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலாவது ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டமர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 14, 2021, 17:27 [IST]
Other articles published on Jul 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+