Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை விட அபாரமாக ஸ்டம்பிங் செய்யும் விக்கெட் கீப்பர்.. பாக். கில் பிறந்து இந்தியாவுக்காக ஆடியவர்

மும்பை : நரேந்திர ஷங்கர் தம்ஹானே இந்திய டெஸ்ட் விக்கெட் கீப்பர். 21 டெஸ்டுகளில் 16 ஸ்டம்பிங்கள் செய்தவர். பிடித்த கேட்சுக்கள் 35.ஸ்லோ பவுலராக கிரிக்கெட் விளையாட துவங்கிய இவர் விக்கெட் கீப்பர் ஆக பணி புரியும் சந்தர்ப்பம் அமைய நிரந்தர விக்கெட் கீப்பராக மாறினார்.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் வாலி கிரவுட் , தம்ஹானேயின் விக்கெட் கீப்பிங் செய்யும் முறையை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.
அன்றைய கால கட்டத்தின் சிறந்த ஸ்பின் பவுலர்கள் சுபாஷ் குப்தே, வினு மன்காட் இவர்களது பந்துக்களுக்கு சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார்.

india national cricket team cricket cricket history sports news interesting facts

இவரது ஸ்பெஷாலிட்டி, ஸ்டம்பிங் செய்யும் பொழுது ஒரு பெயில் (bail) மட்டும் லாகுவமாக தட்டி எடுப்பார்.முதல் தர ஆட்டங்கள் அன்றைய பம்பாய் அணிக்கு விளையாடினார். 93 முதல் தர ஆட்டங்களில் ஸ்டம்பிங்கள் 79. கேட்சுக்கள் 174.

இவரது அறிமுக டெஸ்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிராக, ஜனவரி 1955 டாக்காவில்.டிராவில் முடிந்தது.தம்ஹானேயின் கடைசி டெஸ்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராகதான்.அன்றைய கல்கத்தா டெஸ்ட். டிஸம்பர், 1960.இந்த டெஸ்டும் டிராவில் முடிந்தது.

இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் வீரர்களில் இம்தியாஸ் அஹ்மத், வால்லீஸ் மாத்தைய் தவிர மற்ற 9 வீரர்களும் பவுலிங் செய்தனர்.என் எஸ் தம்ஹானே தேசிய தேர்வு குழு உறுப்பினராகவும் , அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.

oooooooooooooooooooooooooooooooooooooooooooo

பனன்மல் பஞ்சாபி. இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியவர்.இவரும் என் எஸ் தம்ஹானேயுடன் டாக்கா டெஸ்டில் ஜனவரி 1955ல் அறிமுக டெஸ்ட் ஆடினார்.இவர் ஆடியது மொத்தம் டெஸ்டுள்கள் 5.

5 டெஸ்டுகளும் அந்த சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது.பங்கஜ் ராயுடன் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்காக துவக்க வீரராக களம் இறங்கியவர்.கடைசி டெஸ்ட் 1955 பிப்ரவரியில். கராச்சி டெஸ்ட்.

பாகிஸ்தான் கராச்சி சிந்து பகுதியில் 1921ல் பிறந்த இவர், 90 வது வயதில் மும்பையில் மறைந்தார்.முதல் தர கிரிக்கெட் சிந்து மற்றும் குஜராத் அணிகளுக்கு விளையாடியவர்.ஒரு முதல் தர ஆட்டத்தில் 224* அதிக பட்ச ரன்கள் எடுத்த இவர் விளையாடிய 5 டெஸ்டுகளில் எடுத்த மொத்த ரன்கள் 164.

வாசுதேவ், பெங்களூரு

Story first published: Friday, August 9, 2024, 14:47 [IST]
Other articles published on Aug 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+