For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவை கூட்டிட்டு வாங்கப்பா... இந்தியாவிடம் உதை வாங்கிய இங்கிலாந்து புலம்பல்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருதினப் போட்டியில் அசத்தலாக பந்துவீசிய குல்தீப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Recommended Video

குல்தீப்புக்கு ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்- வீடியோ

டெல்லி: இங்கிலாந்து தொடருக்கு முன்பாக மிகப் பெரிய பில்ட்அப் எல்லாம் கொடுக்கப்பட்டது. அங்குள்ள சூழ்நிலையில் இந்திய வீரர்கள் சமாளிப்பது கஷ்டம் என்றெல்லாம் கூறப்பட்டது. தற்போது இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை விரட்டி விரட்டி அடித்து வருகிறது.

முதலில் நடந்த 3 டி-20 போட்டித் தொடரில் 2-1 என்று இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து ஒருதினப் போட்டித் தொடர் துவங்கியுள்ளது. அதில் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இதுவரை நடந்துள்ள நான்கு போட்டிகளிலும் இந்திய அணி பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் கலக்கி வருகிறது. குறிப்பாக பேட்டிங்கில் ரோஹித் சர்மாவும், பவுலிங்கில் குல்தீப் யாதவையும் என்ன செய்வது என்று இங்கிலாந்து திணறுகிறது.

நேற்று நடந்த ஒருதினப் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய குல்தீப் யாதவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துகளை குவித்துள்ளனர். டுவிட்டரில் கிரி்க்கெட் பிரபலங்கள் கூறியவற்றில் ஒரு சிறிய தொகுப்பை இங்கே பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவை அழைத்து வரவும்

மீண்டும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அழைத்து வர முடியுமா... இப்படி அப்பாவியாக கேட்பது இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

சச்சின் பாராட்டு

வித்தியாசமான சிக்சர் எடுத்துள்ளார் குல்தீப். அபாரமான பந்துவீச்சு. இங்கிலாந்துக்கு பின்னடைவு என்று கூறியுள்ளார் கிரிக்கெட் கடவுள் சச்சின்

எப்படிப்பா விளையாடுவது

டுவிட்டரில் குறும்புகாரரான வீரேந்திர சேவாக் டுவிட்டர்தான் டாப். அடடா என்ன ஒரு பந்துவீச்சு. குல்தீப்பின் மிகச் சிறந்த 5 பந்துவீச்சும் வெளிநாடுகளிலேயே நடந்துள்ளது. கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்பதற்குகூட பதில் கிடைத்துவிட்டது. ஆனால், குல்தீப் பந்துவீச்சை எப்படி விளையாடுவது என்பதுதான் தெரியவில்லை.

ஹர்ஷா வாழ்த்து

குல்தீப்பின் விளையாட்டில் ஒரு ஆச்சரியமான சிறப்பு உள்ளது. ரன்களை சேஸ் செய்யும் அணிகளுக்கு எதிராக பந்துவீசும்போது, அந்த அணியின் டாப் வீரர்களை சரித்து விடுகிறார் என்று வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறியுள்ளார்.

சபாஷ்டா தம்பி

மிகச் சிறப்பாக பந்து வீசியுள்ளார் இளம் வீரர் குல்தீப். இந்தியாவுக்கு வலிமை சேர்ந்துள்ளது.

{document1}

Story first published: Friday, July 13, 2018, 10:39 [IST]
Other articles published on Jul 13, 2018
English summary
cricketers louds kuldeep yadav for taking 6 wickets.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X