Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாத்தி கம்மிங்... வீ ஆர் டான்சிங்... தாறுமாறு ஆட்டம் போட்ட இந்திய வீராங்கனைகள்!

லக்னோ : நேற்றைய தினம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியை அடுத்து வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீராங்கனைகள் குத்தாட்டம் போட்டுள்ளனர்.

வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகான்ஷா கோலி, திவ்யா, வனிதா மற்றும் மம்தா ஆகியோர் போட்டுள்ள இந்த குத்தாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிருக்கு இடையில் 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் முதல் போட்டியில் சிறப்பாக வெற்றி பெற்றனர்.

இந்திய மகளிர் வெற்றி

இந்திய மகளிர் வெற்றி

இதையடுத்து லக்னோவின் ஏகானா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஸ்மிரிதி மந்தனா 64 பந்துகளில் 80 ரன்களை குவித்து அணியை தனியாளாக நின்று வெற்றி பெற செய்துள்ளார்.

இந்திய மகளிர் குத்தாட்டம்

இந்திய மகளிர் குத்தாட்டம்

இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும்விதமாக இந்திய வீராங்கனைகள் வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகான்ஷா கோலி, திவ்யா, வனிதா மற்றும் மம்தா ஆகியோர் நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

வைரலான வீடியோ

தேர்ந்தெடுத்த நடனக்கலைஞர்களின் ஆட்டத்தை மிஞ்சும்வகையில் அவர்களது ஆட்டம் இருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் இந்த பாடல் பல்வேறு தரப்பினரின் விருப்பத்திற்குரியதாக உள்ளது. சமீபத்தில் அஸ்வின், பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் வெற்றி சந்தோஷத்தில் இந்த பாடலுக்கு ஆடி வெளியிட்ட வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 10, 2021, 16:30 [IST]
Other articles published on Mar 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+