கடைசியில் நீங்களுமா?.. கோலி, ரோஹித் செய்த டிவிட்.. விளாசும் நெட்டிசன்கள்..பின்னணியில் என்ன நடந்தது?
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் விவசாய போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தது பெரிய வைரலாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் இதில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
டெல்லியில் நடக்கும் விவசாய போராட்டம் சர்வதேச அளவில் வைரலாகி உள்ளது. ரிஹானா, மியா கலீபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் இது தொடர்பாக டிவிட் செய்து வரும் நிலையில், இந்த போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த பிரபலங்களின் டிவிட்கள் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாகவும், இந்தியாவிற்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் போல இருப்பதாகவும் ஒருசாரர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வெளியுறவுத்துறை
இந்தியாவிற்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரம் இது, இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது என்று இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட இது தொடர்பாக டிவிட் செய்தனர். வெளிநாட்டு பிரச்சாரங்களுக்கு அடிபணிய கூடாது என்று டிவிட் செய்தனர்.

டிவிட் செய்தனர்
அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள், இந்திய விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இதில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து சொல்ல கூடாது. இந்தியர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள், இந்திய விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இதில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து சொல்ல கூடாது. இந்தியர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அரசு
அரசு இதற்கு தீர்வு காணும் என்று நம்புகிறோம். வெளிநாட்டு பிரபலங்கள் இதில் பிரச்சாரம் செய்ய எதுவும் இல்லை. இது போன்ற பிரச்சாரங்களுக்கு இந்தியர்கள் செவி சாய்க்க கூடாது, என்று கிரிக்கெட் பிரபலங்கள் டிவிட் செய்து இருந்தனர்.

விளாசல்
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களின் இந்த கருத்துக்கு நெட்டின்சன்கள் ஒரு பக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.நீங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசவேண்டும். இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது திடீரென அரசுக்கு ஆதரவாக பேசுவது தவறு.

சந்தேகம்
நீங்கள் எல்லோரும் ஒரே மாதிரி டிவிட் செய்வது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை இப்படி நாம் கைவிட கூடாது என்று கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக அவர்களின் ரசிகர்கள் பலரும் டிவிட் செய்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

நல்லது
அதே சமயம் இன்னும் சிலர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ளனர். இந்திய பிரபலங்கள் இந்தியாவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள். வெளிநாட்டு பிரபலங்கள் இதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை. இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்த டிவிட் சரிதான் என்று கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications