கிரிக்கெட் வீரர்களின் தங்கையையே திருமணம் செய்து கொண்ட சக அணி வீரர்கள்.. மச்சான் ஆனவர்களின் பட்டியல்
மும்பை : கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு வீரர்களும் மற்ற வீரர்களுடன் ஒரு குடும்பம் போல் தான் பழகுவார்கள். அந்த வகையில் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடன் கூட விளையாடி பழகிய சக வீரர்களின் தங்கைகளையே திருமணம் செய்து மச்சானாகி இருக்கிறார்கள்.
இப்படி கிரிக்கெட் உலகில் யார் யாரின் சகோதரிகளை திருமணம் செய்து இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் கவாஸ்கரும் குண்டப்ப விஸ்வநாத்தும் தான்.

இருவரும் தொடக்க வீரராக கிரிக்கெட் உலகில் கோலோச்சிய நிலையில் கவாஸ்கரின் தங்கையான கவிதாவை குண்டப்ப விஸ்வநாத் காதலித்திருக்கிறார்.இது குறித்து தெரிய வர கவாஸ்கரை தனது தங்கையை விஸ்வநாதனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்.
பாகிஸ்தான் அணியில் உஸ்மான் காதிர் என்ற வீரர் இருந்தார். அவருடைய தங்கையான நூல் அம்னாவை சக வீரரான உமர் அக்மலுக்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்.இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா வீரர் டுப்ளசிஸ். டுபிளசிஸ்க்கு ரேமி ரயன்ஸ் என்ற தங்கை இருக்கிறார்.
அவருடன் சக கிரிக்கெட் வீரரான ஹர்தூஸ் வில்ஜோன் என்ற வீரருக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து டுபிளசிஸ், தன்னுடைய தங்கையை ஹார்துஸ்க்கு திருமணம் செய்து வைத்தார்.இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஸ்டூவர்ட், சக தொடக்க வீரரான மார்க் புட்சரை தன்னுடைய தங்கை ஜூடிக்கு 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்து இருக்கிறார்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் மஹம்மதுல்லா.
மஹமதுல்லா தன்னுடைய தங்கையை பிரபல கிரிக்கெட் வீரரான முசுஃபிகர் ரஹீமுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் டேரண் லீமன். இங்கிலாந்து வீரர் கிரேக் ஒயிட்டின் தங்கையை டேரண் லீமன் காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.


Click it and Unblock the Notifications