Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி சாதனை தொடரட்டும்... சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்து! #dhoni300

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோணி இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் 300வது ஒருநாள் போட்டியை நிறைவு செய்கிறார் இதனால் அவருக்கு பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விட டுவிட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது டோணி 300 ஹேஷ்டேக். இதற்குக் காரணம் மஹேந்திர சிங் டோணி இன்று தனது 300வது ஒருநாள் போட்டியை விளையாடுகிறார்.

2009-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட டோணி, தலைமையில் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது. மேலும் மேலும், சர்வதேச தரவரிசைப்பட்டியலிலும் இந்திய அணி பலமுறை முதலிடத்தை பிடித்ததற்கும் உறுதுணையாக இருந்தவர் மகேந்திரசிங் டோணி. டோணியின் இந்த விளையாட்டு பயணம் சிறக்க சக வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

"கிரிக்கெட் கடவுள்" வாழ்த்து

கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் டோணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஒரு நாள் போட்டிக்கான தொப்பியை 300வது முறையாக அணிவது சிறப்பான சாதனை. இன்றும் உங்களின் விளையாட்டு சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன் என்று சச்சின் டுவீட்டியுள்ளார்.

ரெய்னா பெருமிதம்

தனி அடையாளம் பெற்ற விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் டோணிக்கு வாழ்த்துக்கள் என்று சுரேஷ் ரெய்னா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனக்கு எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் டோணிக்கு வாழ்த்துகள் என்றும் அவர் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

ஜடேஜா ஹேப்பி டுவீட்

இதே போன்று டோணி ஜடேஜாவும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 300வது போட்டி நிறைவு, ஸ்டம்பிங்கில் 100வது நிறைவு இது தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் டுவீட்டியுள்ளார்.

கூல்மேனுக்கு முரளி விஜய் டுவீட்டு

சிறந்த மனிதனுக்கு சிறப்பான தினம் என்று முரளி விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் டோணி சிறப்பாக விளையாடுங்கள் என்றும் முரளி விஜய் டுவீட்டியுள்ளார்.

டீ வில்லியர்ஸ் மகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டீ வில்லர்சும் தன்னுடைய வாழ்த்துகளை டோணிக்கு கூறியுள்ளார். இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருக்கிறது என்று அவர் தனது மகிழ்ச்சியை டோணியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Story first published: Thursday, August 31, 2017, 17:58 [IST]
Other articles published on Aug 31, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+