இந்திய அணி தங்கியிருக்கும் ஹோட்டல் அல்டிமேட் லெவல்..எந்த ரூமில் இருந்து பார்த்தாலும் மேட்ச் தெரியும்
சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் 'Ageas Bowl' ஸ்டேடியத்தில் இவ்வளவு பிரம்மாண்டமா? உண்மையில் இது வேற லெவல் கட்டுமானம் தான்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று (ஜூன்.3) லண்டன் சென்றடைந்தது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த நிலையில், நேற்று பிற்பகல் இந்திய அணி பயணித்த சார்ட்டர் விமானம் லண்டனில் தரையிறங்கியது. வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திறங்கினர். ஆனால், அவர்கள் தங்கவுள்ள ஹோட்டல் தான் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

சவுத்தாம்ப்டன்
அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் தான் இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். வீரர்களுக்கு இந்த ஹோட்டல் அறையில் 5 நாட்கள் குவாரண்டைனில் இருக்கவுள்ளனர். அதில், 3 நாட்களுக்கும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த 3 பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே 4வது நாளில் இருந்து வீரர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

படுத்துக் கொண்டே மேட்ச்
போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் 'Ageas Bowl' ஸ்டேடியம் வெறும் மைதானம் மட்டும் அல்ல. அந்த ஸ்டேடியத்தில் சகல வசதியும் கொண்ட நட்சத்திர ஹோட்டலும் உள்ளது. அதுவும் சாதாரணமான ஹோட்டல் கிடையாது. உங்கள் அறையில் ஏசி ரூமில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு படுத்துக் கொண்டே, மேட்சை லைவாக பார்க்க முடியும். அதற்கு ஏற்றார் போல் தான் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

3 தளங்கள்
இந்த ஸ்டேடியத்தில், 2011ம் ஆண்டு இங்கிலாந்து - இலங்கை இடையே முதல் டெஸ்ட் போட்டி நடந்தாலும், ஹோட்டல் 2015 வரை திறக்கப்படவே இல்லை. 3 தளங்கள் கொண்ட இந்த ஹோட்டலில், மொத்தம் 171 அறைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பால்கனி இருக்கிறது. அதேபோல், இந்த 171 அறையில் இருந்தும் போட்டியை நீங்கள் நேரடியாக கண்டு ரசிக்க முடியும்.

2018ல் போட்டா போட்டி
இதுபோன்று போட்டி நடக்கும் காலங்களில், 20 அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஏனெனில், இங்குள்ள அறைகளில் இருந்து கிரிக்கெட்டை ரசிக்க வேண்டும் என்பதில் ஏக டிமாண்ட் உள்ளது. கலெக்ஷன் கல்லா கட்டுமாம். குறிப்பாக, 2018ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகள் இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடிய போது, இந்த 20 அறைகளில் இடம்பிடிக்க ரசிகர்களிடையே போட்டாப்போட்டியே நடைபெற்றதாம்.


Click it and Unblock the Notifications