For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WWE அண்டர்டேக்கர் இமேஜை ஒரே நொடியில் காலி செய்த ரொனால்டோ.. சவுதி கால்பந்து தொடரில் நடந்த சம்பவம்

ரியாத் : சவுதி அரேபியா நாட்டில் 2024 ரியாத் தொடர் கோப்பை எனும் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் WWE ஜாம்பவான் அண்டர்டேக்கரை அழைத்து வந்தது தொடரை நடத்திய நிர்வாகம். அவருக்காக பல கோடிகள் செலவு செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த மொத்த பில்டப் மற்றும் அண்டர்டேக்கர் எனும் பிம்பத்தை ஒரே நொடியில் காலி செய்தார் உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

சவுதி அரேபியா நாட்டின் அல் நாசர் கால்பந்து அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சில ஆண்டுகளாக ஆடி வருகிறார். அவரது வருகைக்கு பின் சவுதி அரேபியாவில் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சி பல மடங்கு வளர்ந்து இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் சவுதி அரேபியாவின் உள்ளூர் தொடர்களை பார்க்கப் துவங்கி இருக்கின்றனர்.

cristiano-ronaldo-laughed-at-wwe-legend-undertaker-while-he-reveals-riyadh-season-cup

இது எல்லாமே சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் விருப்பத்தின் பெயரில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கால்பந்தை போலவே, ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவில் WWE ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதற்கு சவுதி அரசு பெரும் தொகையை அவர்களுக்கு அளிப்பதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தில் பலர் WWE ரசிகர்களாக இருப்பதால் தான் WWE வீரர்களை நேரில் காண ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2024 ரியாத் தொடர் கோப்பை எனும் கால்பந்து தொடர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன் அண்டர்டேக்கரை வைத்து கோப்பையை அறிமுகம் செய்தனர் போட்டி ஏற்பட்டாளர்கள்.

அதே போல WWE இறுதிப் போட்டிக்கு முன் கோப்பையை அறிமுகம் செய்தார் அண்டர்டேக்கர். சாதாரணமாக இல்லாமல் WWE போட்டிகளில் வருவது போலவே கருப்பு கோட் அணிந்து, WWE-வில் அண்டர்டேக்கருக்கு என ஒலிக்கப்படும் இசையுடன் அவர் உள்ளே வந்தார். இரு அணி வீரர்களும் இரண்டு பக்கமும் நின்று இருந்தனர். அவர்கள் முன் தனக்கே உரிய கம்பீரத்துடன் அண்டர்டேக்கர் கோப்பையை தூக்கி அறிமுகம் செய்தார். அப்போது ரொனால்டோ அருகே நின்ற வீரரிடம் ஏதோ சொல்லி அண்டர்டேக்கரை பார்த்து சிரித்தார்.

அந்த வீடியோ உலகம் முழுவதும் வேகமாக பரவியது. சிலர் ரொனால்டோ அண்டர்டேக்கரை பார்த்து ரொனால்டோ ஆச்சரியப்பட்டு சிரித்தார் என கூறினாலும், பலரும் ரொனால்டோ அவரது பில்டப்பை பார்த்து அடக்க முடியாமல் சிரித்து விட்டார் எனக் கூறி உள்ளனர். பல கோடி ரூபாய் கொடுத்து அழைத்து வரப்பட்ட அண்டர்டேக்கரை ஒரே நொடியில் சிரித்து காலி செய்து விட்டார் ரொனால்டோ.

Story first published: Friday, February 9, 2024, 12:41 [IST]
Other articles published on Feb 9, 2024
English summary
Cristiano Ronaldo laughed at WWE Legend Undertaker while he reveals Riyadh Season cup before final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+