Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சொத்து கொடுக்க முடியாது”.. திருமணத்தின் போதே மனைவியுடன் விவாகரத்து ஒப்பந்தம் போட்ட ரொனால்டோ

லிஸ்பன்: உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமணத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பு சொத்து பிரிவினை ஒப்பந்தம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் விவகாரத்து ஏற்பட்டால் என்னென்ன சொத்துக்கள் மற்றும் ஜீவனாம்சம் வழங்கப்படும் என்ற விவரமும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ரொனால்டோ பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஜார்ஜினாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் ஆகஸ்ட் 11 அன்று திருமணம் நடைபெற்றது. இந்த எளிய திருமணத்தில் ரொனால்டோ மற்றும் ஜார்ஜினாவின் 5 குழந்தைகள் மட்டுமே முன்னிலையில் இருந்தனர். போர்ச்சுகல் தேசிய அணி வீரர்கள் அல்லது அல்-நாசர் கிளப் வீரர்கள் என எந்தவொரு பிரபலமும் இதில் கலந்துகொள்ளவில்லை. ரொனால்டோவின் நீண்டகால நண்பர் மிகுவல் பைக்சாவோ, ஜார்ஜினாவின் சகோதரி இவானா ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்திட்டுள்ளனர். மேலும், இருவரும் தங்களது குடும்பப் பெயர்களை மாற்றிக் கொள்ளவில்லை.

Cristiano Ronaldo secretly marries Georgina Rodriguez in Portugal under Property Division Agreement

போர்ச்சுகல் சட்ட விதிகளின்படி 'சொத்து பிரிவினை' ஒப்பந்தத்தின் கீழ் இருவரும் திருமண பதிவை மேற்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி, இருவரின் தனிப்பட்ட சொத்துக்கள், வருமானம் மற்றும் முதலீடுகள் முழுமையாக அவரவர் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். எதிர்காலத்தில் ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டாலும் சொத்துக்கள் தானாகப் பிரிக்கப்படாது.

சவுதி ப்ரோ லீக் கிளப் அணியான அல்-நாசர் வழங்கும் ஊதியம், பெஸ்தானா சிஆர்7 ஓட்டல் வணிகம், இதுவரை உள்ள சொத்துக்கள் மற்றும் பிற விளம்பர ஒப்பந்தங்களின் வருமானம் முழுமையாக ரொனால்டோ வசமே இருக்கும்.

ஒருவேளை விவாகரத்து செய்தால், ஜார்ஜினாவிற்கு ரொனால்டோ தரப்பில் இருந்து மாதந்தோறும் சுமார் 1.10 கோடி ரூபாய் பராமரிப்புத் தொகை வழங்கப்படும். அத்துடன் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள சுமார் 53.50 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவின் முழு உரிமையும் ஜார்ஜினாவிற்கு வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மனைவியாக இருந்தாலும் சொத்து விஷயத்தில் கவனமாக இருப்பதாக விவாதம் எழுந்துள்ளது.

Story first published: Friday, August 14, 2026, 16:32 [IST]
Other articles published on Aug 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+