Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச ரசிகர்கள் வெறுப்பேற்றியதுதான் என்னை வெறியேற்றியது.. கோஹ்லி கிழி, கிழி

டெல்லி: வங்கதேச ரசிகர்கள் வெறுப்பேற்றியதுதான் என்னை வெறியேற்றியது என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லி.

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 இறுதி போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை ஊதித் தள்ளியது இந்தியா. இப்போட்டியில், தவான் 60, கோஹ்லி 41, டோணி ஆறு பந்துகளில் 20 ரன்கள் விளாசி வெற்றியை வசப்படுத்த உதவினர்.

இந்த போட்டியின்போது, உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் ஒரு வித்தியாச சூழ்நிலை நிலவியதை உணர்ந்திருப்பார்கள்.

ஆரவாரம்

ஆரவாரம்

எந்த ஊரில் போட்டி நடைபெற்றாலும், எந்த அணி விக்கெட்டை வீழ்த்தினாலும், பவுண்டரி அல்லது சிக்சர் விளாசினாலும், ஸ்டேடியத்தில் ஆரவார சத்தம் வந்தே தீரும். ஆனால் வங்கதேசத்தில் நேற்று நடந்த போட்டியை பார்த்தவர்களுக்கு அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்பது புரியும்.

பின் ட்ராப் சைலன்ட்

பின் ட்ராப் சைலன்ட்

வங்கதேச பவுலர்கள் விக்கெட் எடுக்கும்போதும், அந்த அணியினர் பேட் செய்தபோது பவுண்டரி அடித்தபோதும், காதே கிழியும் அளவுக்கு சத்தம்போட்டு சியர்ஸ் செய்த வங்கதேச ரசிகர்கள், இந்திய அணி அவற்றை செய்யும்போது ஊசி விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு, வாயை இறுக்க மூடிக்கொண்டனர்.

சத்தம் வரலைன்னா பவுண்டரி

சத்தம் வரலைன்னா பவுண்டரி

டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்போர், ரசிகர்களின் ஆரவாரத்தை வைத்தே பந்து பவுண்டரி செல்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனால், நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட் செய்யும்போது, பந்து பவுண்டரிக்கு செல்கிறது என்பதை மைதானமே அமைதியாக இருப்பதை கொண்டு ரசிகர்கள் கண்டுபிடித்தனர்.

இது என்ன ரசனை

இது என்ன ரசனை

கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல், திறமைக்கு மரியாதை தராமல், ஒருதலைபட்சமாக வங்கதேச ரசிகர்கள் நடந்துகொண்டது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

முகத்தில் கரிபூசினார் கோஹ்லி

முகத்தில் கரிபூசினார் கோஹ்லி

இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர் விராட் கோஹ்லியிடம் டிவி வர்ணனையாளர்கள் கேட்டபோது, அவர் பக்காவாக ஒரு பதிலடி கொடுத்து வங்கதேச ரசிகர்கள் முகத்தில் கரியை பூசினார்.

வெறியேத்துரிகளோ..

வெறியேத்துரிகளோ..

"உண்மையில், வங்கதேச ரசிகர்கள் வெறுப்பேற்றியதுதான் என்னை சிறப்பாக ஆட தூண்டியது. எனவேதான் சிறப்பாக ஆடினேன்" என்றார் கோஹ்லி. இனிமேல் என்னிக்காவது, எந்த டீமுக்கு எதிராகவாவது, இப்படி பண்ணுவீங்க பங்ளாதேஷ்?

Story first published: Monday, March 7, 2016, 11:59 [IST]
Other articles published on Mar 7, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+