Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கற்காலத்துக்குத் தாவிய இலங்கை ரசிகர்கள்.. தோற்றதால் கடுப்பாகி பாக். வீரர்கள் மீது கல்வீசினர்

கொழும்பு: கிரிக்கெட்டில் இலங்கை தோல்வியடைவதை தாங்க முடியாத அந்த நாட்டு ரசிகர்கள், பாகிஸ்தான் வீரர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், போட்டி தாமதமாக நடைபெற்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 3வது ஆட்டம் நேற்று கொழும்பில் பிரேமதாசா மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

அதிகபட்சமாக சர்ப்ராஸ் அகமது 77 ரன்னும், முகமது ஹபீஸ் 54 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் மலிங்கா, பதிரானா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 41.1 ஓவர்களில் 181 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாக். முன்னிலை

பாக். முன்னிலை

அதிகபட்சமாக திரிமன்னே 56 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 4 விக்கெட்டும், இமாத் வாசிம், அன்வர் அலி தலா 2 விக்கெட்டும், ரஹாத் அலி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கல்வீச்சு

கல்வீச்சு

இந்த போட்டியின்போது இலங்கை அணி 34 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து இருந்தபோது மைதானத்துக்குள் பாகிஸ்தான் வீரர் அருகே கல் ஒன்று விழுந்தது. இதனால் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, மைதானத்தின் வெளியே இருந்தும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. இதனால் பீதியடைந்த ரசிகர்கள் அங்கும், இங்கும் ஓடினார்கள். ரசிகர்களுக்குள்ளும் திடீர் மோதல் ஏற்பட்டது.

இடைநிறுத்தம்

இடைநிறுத்தம்

மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் கூச்சல்- குழப்பமாக இருந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் அறைக்கு உடனே திரும்பினார்கள். இதையடுத்து கலவர தடுப்பு சிறப்பு பிரிவு படையினர் வரவழைக்கப்பட்டனர். துப்பாக்கியுடன் வந்த அவர்கள் ரசிகர்களை கட்டுப்படுத்தினர். வெளியில் நின்ற ரசிகர்களை அப்புறப்படுத்தினர். நிலைமை கட்டுக்குள் வந்தபிறகு போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. ரசிகர்கள் ரகளையால் போட்டி அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதில் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கற்கள் வீசப்பட்டத்தில் பல மோட்டார் சைக்கிள், கார்கள் சேதம் அடைந்தது. போட்டி முடியும் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Story first published: Monday, July 20, 2015, 13:47 [IST]
Other articles published on Jul 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+