Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.யை சந்திக்கும் நியூசி...! 1999ம் ஆண்டு வரலாறு இன்று திரும்புமா..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

லார்ட்ஸ்: 20 ஆண்டுகாலம் கழித்து, ஆஸ்திரேலியாவை உலக கோப்பையில் நியூசிலாந்து வீழ்த்துமா என்று ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

உலக கோப்பையின் முக்கிய ஆட்டம் ஒன்றில், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வென்று, தனது அரையிறுதி இடத்தை உறுதி செய்ய நியூசிலாந்து நிச்சயம் முயலும். அதே நேரத்தில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலியா, தனது வெற்றி பயணத்தை தொடர முயற்சிக்கும்.

இரு அணிகளும், நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரே போட்டியில்தான் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவுடனான போட்டி ரத்தானதால், ஆஸ்திரேலியாவை விட ஒரு புள்ளி நியூசி. பின்தங்கி இருக்கிறது. இந்தியாவிடம் மட்டும்தான் ஆஸ்திரேலியா, தோல்வியடைந்துள்ளது.

2015 உலக கோப்பை

2015 உலக கோப்பை

2015ம் ஆண்டு உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மோதின. அதில் வென்ற ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச் சென்றது. வெளிநாடுகளில் இரு அணிகளும் விளையாடியுள்ள 20 போட்டிகளில் 19ல் ஆஸி. வென்றிருப்பது வரலாறு. கடைசியாக 1999ம் உலக கோப்பையில் நடந்த ஒரு போட்டியில் மட்டும் தான் நியூசிலாந்து வெற்றி கண்டது.

7ல் ஒரு வெற்றி

7ல் ஒரு வெற்றி

அதேபோல இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 7 முறை உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. அந்த 7 போட்டிகளிலும் ஒரு முறைதான் நியூசி. வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொடரில் ஆஸி. அட்டகாச பார்மில் இருக்கிறது. அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற பட்டியலில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் பின்ச், வார்னர் உள்ளனர். பவுலிங்கிலும் ஆஸ்திரேலியா கலக்கி வருகிறது.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

நியூசிலாந்தில் அதன் கேப்டன் கேன் வில்லியம்சன், நல்ல பார்மில் இருக்கிறார். அவர் 5 இன்னிங்ஸ்களில் 414 ரன்கள் குவித்துள்ளார். அவர், மீண்டும் ஒருமுறை அணியை முன்னின்று நடத்துவதில் தீவிரம் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசை வீரர்கள்

தொடக்க வீரர்களான குப்தில், மன்ரோ ஜோடி நிலைத்து நிற்காமல் இருப்பது பலவீனம். மிடில் ஆர்டரிலும் அந்த லாதம், ராஸ் டெய்லர் ஜொலிக்கவில்லை. ஆல் ரவுண்டர்களான காலின் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடினர். மீண்டும் அவர்கள் அட்டகாசமாக ஆடலாம் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, June 29, 2019, 12:55 [IST]
Other articles published on Jun 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+