நாக்பூரில் இந்தியா அபார ஆட்டம், சச்சின் சதம்: தினறிய தென் ஆப்பிரிக்கா
நாக்பூர்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா போட்டியில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்தார். உலகக் கோப்பை போட்டிகளில் சச்சின் அடித்துள்ள 6வது சதம் இது.

நாக்பூரில் நடந்து கொண்டிருக்கும் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. களத்தில் இறங்கியதும் முதல் பந்திலேயே சேவாக் 4 அடித்தார். பின்னர் சேவாக், சச்சின் இருவரும் அதிரடியாய் ஆடத் துவங்கினர். சேவாக் 63 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவர் பனினிரெண்டு 4 அடித்தார்.
ஒரு முடிவோடு களமிறங்கிய சச்சின் அசத்தலாய் விளையாடி 101 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். உலகக் கோப்பை போட்டிகளில் அவர் அடித்துள்ள 6வது சதம் இது. ஏற்கனவே அவர் அடித்துள்ள 5 சதங்கள் தான் உலகக் கோப்பைகளில் தனி நபர் அடித்துள்ள அதிகமான சதம் ஆகும். தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளார். சச்சின் 8 போர், 3 சிக்ஸ் அடித்து அபாரமாய் ஆடினார்.
மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்த கம்பீர் 75 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணியின் அசத்தலான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஆட்டம் கண்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications