Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காடுகளுக்குள் ஹோட்டல்..இந்திய அணிக்காக தென்னாப்பிரிக்க செய்த பெரும் ஏற்பாடு..வைரலாகும் புகைப்படங்கள்

மும்பை: இந்திய அணியின் சுற்றுப்பயணத்திற்காக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் செய்துள்ள ஹோட்டல் ஏற்பாடு தனி கவனம் பெற்றுள்ளது.

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்காக நாளை இந்திய வீரர்கள் மும்பையில் கூடவுள்ள நிலையில் வரும் 16ம் ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளனர்.

 இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்த சுற்றுப்பயணத்தின் போது வீரர்களின் பாதுகாப்பு தான் தற்போது பேசுப்பொருளாகவுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் அதிகம் பரவி வருவதால், முதலில் இந்த தொடர் ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 26ம் தேதி முதலும், டி20 போட்டிகள் ஜனவரி 19ம் தேதியும் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் வருகைக்காக பல அடுக்கு ஏற்பாடுகளை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. அதாவது இந்திய அணி வீரர்கள் தங்குவதற்காக "ஐரீன் கண்ட்ரீ லாட்ஜ்" என்ற ஹோட்டல் புக் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு துளிக்கூட குறை இல்லாத ஹோட்டலாக இது பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஹோட்டல் அமைந்திருக்கும் இடம் மற்றும் வடிவமைப்பு மிகச்சிறப்பானது.

காடுகளுக்கு இடையே

காடுகளுக்கு இடையே

காடுகளுக்கு இடையே, அமைதியான சூழலில் கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் அவ்வளவு சீக்கிரம் யாராலும் நுழைந்துவிட முடியாது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் தொடர்களை வெற்றிகரமாக முடித்துள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த ஐரீன் கண்ட்ரீ லாட்ஜ்-ல் இருந்த பயோ பபுள் ஏற்பாடு தான். வீரர்கள் அனைவரும் இங்கு தான் பெரும்பாலும் தங்கவைக்கப்பட்டனர்.

 வைரல் போட்டோஸ்

வைரல் போட்டோஸ்

அந்தவகையில் இந்திய அணிக்கும் இங்கு ரூம் புக் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 17ம் தேதி அங்கும் செல்லும் இந்திய வீரர்கள், செஞ்சூரியனில் நடக்கும் முதல் டெஸ்டிற்கும், ஜோசன்பர்க்கில் நடக்கும் 2வது டெஸ்டிற்கும் ஐரீன் லாட்ஜில் இருந்து தான் தயாராகவுள்ளனர். இந்த ஹோட்டல் அறைகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

BCCI announces India squad for South Africa Test series | Oneindia Tamil
விதிமுறைகள் என்ன

விதிமுறைகள் என்ன

வெளியில் இருந்து விருந்தினர் யாரும் வர அனுமதியில்லை. ஹோட்டல் ஊழியர்களும் குவாரண்டைனில் இருந்த பின்னரே அங்கு பணியாற்றுகின்றனர். தினந்தோறும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெரும் பரபரப்பளவு கொண்ட ஹோட்டலை சுற்றி கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. பயோ பபுள் ஏற்பாடுகளை கண்காணிக்க தனி அதிகாரிகள் உள்ளனர்.

Story first published: Friday, December 10, 2021, 15:18 [IST]
Other articles published on Dec 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+