டிஎன்பில் சீசன் 3 : முதல் அணியாக வெளியேற்றப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்
சென்னை : டிஎன்பில் சீசன் 3 போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி ,நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்தது.
தொடர்ந்து பெற்ற 5ஆவது தோல்வியின் மூலம் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் 167 ரன்களை எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

முதல் சீசனில் இரண்டாமிடம் மற்றும் இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதல் சுற்றோடு வெளியேறியது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.களமிறங்கிய 5 போட்டிகளும் தோல்வியை தழுவியது சேப்பாக் அணி.
இத்தொடரில் அந்த அணி ஒரு வெற்றி கூட பெறமுடியாமல் தத்தளிக்கிறது. கடந்த இரண்டு தொடர்களிலும் சேப்பாக் அணியை வழிநடத்திய ராஜகோபால் சதீஷ் இம்முறை டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியது.
இம்முறை கோபிநாத் சேப்பாக் அணியின் கேப்டனாக பதவியேற்று அணியை வழிநடத்தினார். கடந்த தொடர்களில் சேப்பாக் அணிக்காக விளையாடிய பல வீரர்கள் இந்த முறை மற்ற அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
ராஜகோபால் சதீஷ், தலைவன் சற்குணம், யோ மகேஷ், சாய் கிஷோர் ஆகியோர் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். இவர்கள் இல்லாத சேப்பாக் அணி,தனது வலிமையை இழந்து காணப்படுகிறது. சாய் கிஷோர் கடந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேப்பாக் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட இந்திய அணியின் ஆல் ரௌண்டர் விஜய் ஷங்கர் ஒரு போட்டியில் கூட விளையாடாதது மேலும் ஒரு பின்னடைவு.
5 போட்டிகளில் நான்கு போட்டிகள் இலக்கை எட்டமுடியாமல் தோல்வியை தழுவியது. சிறந்த பினிஷிர் இல்லாமல் அந்த அணியை தோல்வியை தழுவியது என்றால் மிகையில்லை.
Story first published: Sunday, July 29, 2018, 14:38 [IST]
Other articles published on Jul 29, 2018


Click it and Unblock the Notifications